மலையாளக் கவிஞரும், பாடலாசிரியரும், ஞானபீட விருது பெற்றவருமான ஓ.என்.வி பெயரில் இலக்கியத்துக்காக வழங்கப்படும் விருது முதல் முறையாக கேரளாவை சேராத ஒருவரான கவிஞர் வைரமுத்துக்கு அறிவிக்கப்பட்டது. இந்த விருதைப் பெறுவதில் தான் மிகுந்த மகிழ்ச்சியடைவதாக வைரமுத்து தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், வைரமுத்துவுக்கு விருது அறிவிக்கப்பட்டதற்கு அவர் மீது நடிகை பார்வதி மற்றும் பாடகி சின்மயி கண்டனம் தெரிவித்திருந்தனர். இதுதொடர்பான அவருடைய ட்விட்டர் பதிவில், ‘வைரமுத்துவுக்கு விருது வழங்கப்படுவதற்கு மறைந்த ஓ.என்.வி.குருப் பெருமைப்படுவார்’ என்று பதிவிட்டிருந்தார்.
கோபாலபுரத்தில்
ஓ.என்.வி இலக்கிய விருதினைக்
கலைஞருக்குக் காணிக்கை செய்தேன்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
என்னை வாழ்த்தி மகிழ்வித்தார்.அவரது குரலும் அன்பும்
இன்னும் அந்த இல்லத்தில்
கலைஞர் வாழ்வதாகவே
பிரமையூட்டின.தந்தைபோல்
தமிழ் மதிக்கும் தனயனுக்கு
நன்றி சொல்லி மகிழ்ந்தேன். pic.twitter.com/7sVB3R7d8h— வைரமுத்து (@Vairamuthu) May 27, 2021
அவரைத் தொடர்ந்து பல்வேறு எழுத்தாளர்களும், பெண்ணியவாதிகளும் வைரமுத்துவுக்கு விருது அறிவிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில், வைரமுத்து விருது வழங்குவது தொடர்பாக மறுபரிசீலனை செய்யவுள்ளதாக ஓ.என்.வி கலாச்சார மையம் தெரிவித்துள்ளது.
ஓ.என்.வி அவர்கள் நம் பெருமை. இலக்கியத்திற்கான இவரின் பணி ஈடு செய்ய முடியாதது, நம்முடைய கலாச்சாரத்திற்கு இவரின் வரிகள் எவ்வளவு ஊட்டமளித்தது. இவரின் எழுத்துக்களின் மூலம் நம்முடைய மனம் மற்றும் இதயம் எவ்வளவு நன்மைகளை அடைந்தது. இவ்வளவு பெருமை வாய்ந்த இந்த உயரிய விருதை இப்படி அவமரியாதை செய்ததன் காரணம் என்ன? பாலியல் செயற்பாடுகளில் ஈடுபட்ட ஒரு நபருக்கு இந்த மரியாதையை கொடுத்தது அவமரியாதை என தெரிவித்துள்ளார்.
— Parvathy Thiruvothu (@parvatweets) May 27, 2021
Mr. Vairamuthu gets the fifth ONV literary award instituted by the ONV Cultural Academy.
Wow.
Late Mr ONV Kurup would be proud.
— Chinmayi Sripaada (@Chinmayi) May 26, 2021
ONV Sir’s name resounds with deep sensitivity, dignity and respect for any Malayalee. Therefore very disturbed to know that ONV Academy has chosen an alleged perpetrator (called out by 17 women) for the #ONVAward. Are these the values they celebrate? https://t.co/Y87dOIcGfj
— Anjali Menon (@AnjaliMenonFilm) May 27, 2021
இது தொடர்பாக நாளிதழுக்கு பேட்டியளித்துள்ள ஓ.என்.வி கலாச்சார மையத்தின் தலைவரும், மலையாள திரையுலகின் மிகச் சிறந்த இயக்குனருமான அடூர் கோபாலகிருஷ்ணன், ‘வைரமுத்து மீது இருக்கும் பாலியல் புகார் குறித்து நடுவருக்கு தெரியாமல் இருந்திருக்கலாம். வைரமுத்து எழுத்தை மட்டும் கணக்கில் கொண்டு அவருக்கு விருது வழங்கும் முடிவை நடுவர்கள் எடுத்திருக்கலாம். இந்த விருது தொடர்பாக ஏற்கனவே வைரமுத்துவிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கூட்டம் நடத்தி விரைவில் முடிவு செய்யப்படும்’ என்று தெரிவித்துள்ளார்.
வைரமுத்துவுக்கு கொடுக்கப்படவிருந்த ஓ.என்.வி விருது மறுபரிசீலனை செய்யப்படும் என்ற அறிவிப்பையடுத்து, இயக்குநர் பாரதிராஜா, குளத்தில் கல்லெறிந்தவர்கள் எறியட்டும். வைரமுத்து நீ சமுத்திரம்”என்று ஆதரவாக அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில்,
உலகத் தமிழர்களின் நெஞ்சங்களில் கவிப்பேரசு என்கிறபட்டம் சூட்டி கம்பீரமாக நிற்கும் கவிஞனே உன்னை அசைத்துப் பார்த்து விடலாம் என்பது வெறும்கனவாகவே இருக்கும்.#ONVaward @Vairamuthu pic.twitter.com/F4hyu1sXzS
— Bharathiraja (@offBharathiraja) May 28, 2021







