தெலுங்கு திரையின் முன்னணி ஹீரோவான நாகார்ஜூனா தற்போது கோஸ்ட் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் இயக்குனர் பிரவீன் சட்டாரு இயக்கி வருகிறார். தெலுங்கு சினிமாவின் முன்னணி ஹீரோயினாக வளம் வருபவர் காஜல் அகர்வால். திருமணத்திற்கு பிறகு தொடர்ந்து நடித்து வந்தார்.இந்நிலையில், கடந்த சில மாதங்களாக காஜல் திரையுலகில் இருந்து ஓய்வில் உள்ளாராம். தெலுங்கு சினிமா வட்டாரங்களில் காஜல் கர்பமாக இருப்பதாகவும் அதனால் தான் தற்போது ஓய்வில் இருக்கிறார் என்று செய்திகள் பரவி வந்தன. ஆனால், இந்த செய்தியை குறித்து காஜலும் மவுனமாக உள்ளதால் உண்மை என்று கிசுகிசுக்க படுகிறது.
தற்போது இதனை உண்மை என்று உணர்த்தும் விதமாக கோஸ்ட் படக்குழுவினர் ஹீரோயினை மாற்ற முடிவு செய்துள்ளனர். காஜலுக்கு பதிகளாக படக்குழுவினர் இலியானாவை ஒப்பந்தம் செய்துள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன்பு தெலுங்கு சினிமாவின் முன்னணி ஹீரோயினாக வளம் வந்தவர் நடிகை இலியானா என்பது குறிப்பிடத்தக்கது.
Puthiyathalaimurai TV Thanthi TV News18 Tamil Nadu News7 Tamil Sathiyam TV Sun News Kalaignar News News J TV Jaya Plus News Captain TV News Polimer News