பிரபாஸை வைத்து இயக்கும் சூரரைப் போற்று இயக்குனர் சுதா கொங்கரா

தமிழ் திரை உலகத்தில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் சுதா கொங்கரா. அடுத்ததாக பிரபாஸ் நடிக்க இருக்கும் படத்தை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இயக்குனர் மணிரத்தினத்தின் உதவி இயக்குனராக பணியாற்றியவர் தான் சுதா கொங்கரா. இவர் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான துரோகி படத்தின் மூலம் சுதா கொங்கரா அறிமுகமானார்.


அடுத்ததாக 2016 ஆம் ஆண்டு இவர் இயக்கத்தில் வெளிவந்த இறுதிச் சுற்று படம் நல்ல வரவேற்பை பெற்றதோடு, தேசிய விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை குவித்தது. அடுத்து இவர் இயக்கிய சூர்யா நடித்த சூரரைப் போற்று திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் மூலம் அவர் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு இயக்குனராக வளந்துள்ளார். இந்த நிலையில் இயக்குனர் சுதா கொங்கரா, பிரபாஸ் அவர்களுக்கு கதை சொன்னதாகவும், அந்த கதை பிரபாஸுக்கு பிடித்து போனதாகவும் அடுத்த கட்ட பணிகள் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

 
Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course