ஓடிடியில் கவின் படத்தை ரிலீஸ் செய்ய அறிவித்துள்ளனர்…

பிரபல சின்னத்திரை நடிகரான கவின் ஹீரோவாக நடித்திருக்கும் படம் “லிப்ட்”. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடரில் நடித்து வரவேற்பு பெற்றார். அதையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று இவருக்கென்று தனி ரசிகர் கூட்டமே உருவானது. அதற்கு பின்பு கவின் ஹீரோவாக அறிமுகமான நட்புன்னா என்னானு தெரியுமா எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை.அதையடுத்து தற்போது கவின் லிப்ட் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக அம்ரிதா நடித்துள்ளார். இந்த படத்தை முதலில் திரையரங்கில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டிருந்தனர். கொரோனா இரண்டாம் அலை காரணமாக படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டது. பிறகு மற்ற படங்களை போன்று லிப்ட் படத்தையும் ஓடிடியில் வெளியிட படக்குழு முடிவுசெய்துள்ளனர்.இந்நிலையில், படத்தின் ரிலீஸ் தேதி அறிவித்துள்ளனர். வரும் அக்டோபர் 1 ஆம் தேதி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் படத்தை ரிலீஸ் செய்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். மேலும், இந்த படத்தில் ஒரு பாடலை சிவகார்த்திகேயன் பாடியுள்ளார்.

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course