ராம் மற்றும் ஜானுவின் ஹிந்தி வெர்ஷன் விரைவில்…

தமிழில் விஜய் சேதுபதி மற்றும் திரிஷா முதல் முறையாக இணைந்த படம் 96. இந்த படத்தில் ராம் மற்றும் ஜானு கதாபாத்திரத்தில் இருவரின் நடிப்பு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. தங்களின் பள்ளி பருவ காதலை பல வருடங்களுக்கு பிறகு இணைவு கூறும் விதமாக படத்தின் கதைத்தளம் அமைத்திருந்தார் இயக்குனர் பிரேம் குமார். இந்த பாடத்தின் மூலம் ரசிகர்கள் அவர்களின் பள்ளி பருவ பசுமையான நாட்களுக்கு மீண்டும் அழைத்து சென்றது என்றே கூறலாம்.மேலும், இந்த படத்தில் காதலே காதலே என்ற பாடல் இன்றளவும் ரசிகர்களின் மனதில் நீங்க இடம் பிடித்துள்ளது. பின்னணி இசை படத்திற்கு பெரும் பக்கபலமாக அமைந்தது மற்றொரு சிறப்பு. இந்த படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பை பெற்றது. தமிழில் ஹிட்டான இந்த படத்தை தெலுங்கு மற்றும் கன்னடத்தில் ரீமேக் செய்தனர். தற்போது மீண்டும் இந்த படத்தை ரீமேக் செய்யவிருக்கின்றனர்.96 படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்ய உள்ளதாக விஜய் சேதுபதி அவரது சமூக வலைதளபாகத்தில் பதிவிட்டுள்ளார். இந்நிலையில், இந்த படத்தை அஜய் கபூர் தயாரிக்கவுள்ளார். அதையடுத்து படத்தின் நடிகர் நடிகை மற்றும் இதர நடிகர்கள் பற்றிய தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர்.

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course