கவிஞர் வைரமுத்துவுக்கு விருது வழங்குவது தொடர்பாக மறு பரிசீலனை – ஓ.என்.வி விருது குழு!

மலையாளக் கவிஞரும், பாடலாசிரியரும், ஞானபீட விருது பெற்றவருமான ஓ.என்.வி  பெயரில் இலக்கியத்துக்காக வழங்கப்படும் விருது முதல் முறையாக கேரளாவை சேராத ஒருவரான கவிஞர் வைரமுத்துக்கு அறிவிக்கப்பட்டது. இந்த விருதைப் பெறுவதில் தான் மிகுந்த மகிழ்ச்சியடைவதாக வைரமுத்து தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், வைரமுத்துவுக்கு விருது அறிவிக்கப்பட்டதற்கு அவர் மீது நடிகை பார்வதி மற்றும்  பாடகி சின்மயி கண்டனம் தெரிவித்திருந்தனர். இதுதொடர்பான அவருடைய ட்விட்டர் பதிவில், ‘வைரமுத்துவுக்கு விருது வழங்கப்படுவதற்கு மறைந்த ஓ.என்.வி.குருப் பெருமைப்படுவார்’ என்று பதிவிட்டிருந்தார்.

அவரைத் தொடர்ந்து பல்வேறு எழுத்தாளர்களும், பெண்ணியவாதிகளும் வைரமுத்துவுக்கு விருது அறிவிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில், வைரமுத்து விருது வழங்குவது தொடர்பாக மறுபரிசீலனை செய்யவுள்ளதாக ஓ.என்.வி கலாச்சார மையம் தெரிவித்துள்ளது.

வைரமுத்துஓ.என்.வி அவர்கள் நம் பெருமை. இலக்கியத்திற்கான இவரின் பணி ஈடு செய்ய முடியாதது, நம்முடைய கலாச்சாரத்திற்கு இவரின் வரிகள் எவ்வளவு ஊட்டமளித்தது. இவரின் எழுத்துக்களின் மூலம் நம்முடைய மனம் மற்றும் இதயம் எவ்வளவு நன்மைகளை அடைந்தது. இவ்வளவு பெருமை வாய்ந்த இந்த உயரிய விருதை இப்படி அவமரியாதை செய்ததன் காரணம் என்ன? பாலியல் செயற்பாடுகளில் ஈடுபட்ட ஒரு நபருக்கு இந்த மரியாதையை கொடுத்தது அவமரியாதை என தெரிவித்துள்ளார்.                   

இது தொடர்பாக நாளிதழுக்கு பேட்டியளித்துள்ள ஓ.என்.வி கலாச்சார மையத்தின் தலைவரும், மலையாள திரையுலகின் மிகச் சிறந்த இயக்குனருமான அடூர் கோபாலகிருஷ்ணன், ‘வைரமுத்து மீது இருக்கும் பாலியல் புகார் குறித்து நடுவருக்கு தெரியாமல் இருந்திருக்கலாம். வைரமுத்து எழுத்தை மட்டும் கணக்கில் கொண்டு அவருக்கு விருது வழங்கும் முடிவை நடுவர்கள் எடுத்திருக்கலாம். இந்த விருது தொடர்பாக ஏற்கனவே வைரமுத்துவிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கூட்டம் நடத்தி விரைவில் முடிவு செய்யப்படும்’ என்று தெரிவித்துள்ளார்.

Let-those-who-are-stoned-in-the-pool-throw--Vairamuthu-you-are-the-ocean----Bharathirajaவைரமுத்துவுக்கு கொடுக்கப்படவிருந்த ஓ.என்.வி விருது மறுபரிசீலனை செய்யப்படும் என்ற அறிவிப்பையடுத்து, இயக்குநர் பாரதிராஜா, குளத்தில் கல்லெறிந்தவர்கள் எறியட்டும். வைரமுத்து நீ சமுத்திரம்”என்று ஆதரவாக அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில்,

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course