சாக்லேட் பாய் – சயின்டிஸ்ட் மாதவனின் புதிய படைப்பு!!

தமிழ் சினிமாவின் சாக்லேட் பாய் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர் நடிகர் மாதவன். இவர் மணிரத்னம் இயக்கத்தில் அலைபாயுதே படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இந்த படத்தில் மாதவனுக்கு ஜோடியாக ஷாலினி நடித்திருந்தார். காதல் கதையம்சம் கொண்ட இப்படம் பெரும் வெற்றி பெற்றது. மாதவனுக்கு அறிமுக படத்திலேயே ப்ளாக்பூஸ்டர் ஹிட்டாக அமைந்தது.மேலும், இந்த படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் படங்கள் இன்றளவும் ரசிகர்களை ஈர்க்கும் விதமாக உள்ளது. இந்த படம் மற்றும் பாடல்களுக்கென பெரும் ரசிகர் கூட்டமே உள்ளது. இந்த படத்திற்கு பிறகு மாதவன் அடுத்தடுத்து படங்களில் நடித்து வந்தார். பிறகு ஹிந்தியில் அறிமுகமாகி வரவேற்பு பெற்றார். பின்பு தமிழில் மீண்டும் ரி- என்ட்ரி கொடுக்கும் விதமாக இறுதி சுற்று, விக்ரம் வேதா ஆகிய படங்கள் பெரும் வெற்றி பெற்றது.அதையடுத்து, தற்போது பெரும் பொருட்செலவில் மாதவன் இயக்குனராக அறிமுகமாகும் படம் “ராக்கெட்ரி”. இந்த படத்தில் மாதவன் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக சிம்ரன் நடித்துள்ளார். மேலும், இந்த படத்தில் நடிகர் சூர்யா,ஷாருக் கான் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளனர். சாம்.சி.எஸ். இசையமைத்துள்ளார். படத்தின் ரிலீஸ் அடுத்த ஆண்டு ஏப்ரல் 1 தேதி என்று படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இந்த படத்தை தமிழ்,தெலுங்கு,ஹிந்தி,மலையாளம்,கன்னடம் மற்றும் ஆங்கிலம் என 6 மொழிகளில் வெளியிடவுள்ளனர்.

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course