இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் மிகப்பிரமாண்டமாக உருவாக்கி வருகிறது. இந்த படத்தில் மிக பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர். இந்த படத்தில் விக்ரம்,கார்த்தி,ஜெயம் ரவி,விக்ரம் பிரபு,பிரபு,ஐஸ்வர்யா ராய்,திரிஷா மற்றும் அமிதாப் பச்சன் என இன்னும் பலர் இந்த படத்தில் நடித்து வருகின்றனர். சமீபத்தில் ஐஸ்வர்யா ராய் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வெளியான புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவியது.இந்நிலையில், படத்தின் படப்பிடிப்பு பாண்டிச்சேரி,ஹைதராபாத், மத்திய பிரதேஷ் ஆகிய இடங்களில் நடத்தியுள்ளனர். தற்போது படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ளது என்று படக்குழுவினர் புதிய போஸ்டர் மூலம் அறிவித்துள்ளனர். மேலும், அடுத்த ஆண்டு படத்தின் முதல் பாகம் ரிலீஸ் செய்ய அறிவித்துள்ளனர்.
அதையடுத்து படத்தில் நடித்த நடிகர்கள் அவர்களின் படப்பிடிப்பு பணிகள் முடிந்துள்ளது என்று சமீபத்தில் ஜெயம் ரவி மற்றும் கார்த்தி சமூக வலைதளபாகத்தில் பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Puthiyathalaimurai TV Thanthi TV News18 Tamil Nadu News7 Tamil Sathiyam TV Sun News Kalaignar News News J TV Jaya Plus News Captain TV News Polimer News