சமந்தாவை அடுத்து திருப்பதிக்கு காதலருடன் சென்ற நயன்…

சமீபத்தில் சமந்தா திருப்பதிக்கு ஸ்வாமி தரிசனத்திற்கு சென்றுள்ளார் அப்போது பத்திரிகையாளர் கேட்ட கேள்விக்கு கோவமாக பதில் அளித்துவிட்டு சென்ற வீடியோ இணையத்தில் வேகமாய் பரவியது. இந்நிலையில், நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமலைக்கு சென்றுள்ளனர்.திருமலைக்கு ஸ்வாமி தரிசனம் செய்து நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் வெளியே வரும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. நயன்தாரா தற்போது அண்ணாத்த, காத்து வாக்குல ரெண்டு காதல் என அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். இயக்குனர் விக்னேஷ் சிவன் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தை இயக்கி வருகிறார். அதுமட்டுமின்றி படலாசிரியராகவும் பணியாற்றி வருகிறார். சமீபத்தில் வெளியான அஜித்தின் வலிமை படத்தில் நாங்க வேற மாறி என்ற பாடலை எழுதியுள்ளார்.இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு காதலர் விக்னேஷ் சிவனின் பிறந்தநாளை இருவரும் சேர்ந்து கொண்டாடியுள்ளனர். அதன் புகைப்படங்கள் விக்னேஷ் சிவன் அவரது இன்ஸ்டாவில் பதிவிட்டிருந்தார். ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து லைக் செய்துள்ளனர்.

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course