உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்தே வருகிறது.
உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16.70 கோடியை தாண்டி உள்ளது. இந்நிலையில் உலகம் முழுவதும் தற்போது 16,70,34,470 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 14,79,97,270 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 34 லட்சத்து 68 ஆயிரத்து 400 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ்க்கு தற்போது 1,55,68,802 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 97,448 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:
அமெரிக்கா – பாதிப்பு – 3,38,82,333, உயிரிழப்பு – 6,03,876, குணமடைந்தோர் – 2,74,71,242
இந்தியா – பாதிப்பு – 2,65,28,846, உயிரிழப்பு – 2,99,296, குணமடைந்தோர் – 2,34,18,523
பிரேசில் – பாதிப்பு – 1,60,47,439, உயிரிழப்பு – 4,48,291, குணமடைந்தோர் – 1,44,62,432
பிரான்ஸ் – பாதிப்பு – 55,93,962, உயிரிழப்பு – 1,08,526, குணமடைந்தோர் – 51,95,870
துருக்கி – பாதிப்பு – 51,78,648, உயிரிழப்பு – 46,071, குணமடைந்தோர் – 50,13,111
Puthiyathalaimurai TV Thanthi TV News18 Tamil Nadu News7 Tamil Sathiyam TV Sun News Kalaignar News News J TV Jaya Plus News Captain TV News Polimer News







