14-வது ஐபிஎல் தொடரின் இரண்டாவது தகுதிச்சுற்றில் டெல்லி கேபிடல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இன்று ஷார்ஜா மைதானத்தில் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் வெல்லும் அணி பைனலில் சென்னை சூப்பர் கிங்ஸ் உடன் மோதும் என்பதால் இப்போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.
இந்த ஐபிஎல் தொடரில் சென்னை அணி ஏற்கனவே பைனலுக்கு முன்னேறிவிட்டது. எலிமினேட்டர் போட்டியில் தோற்ற பெங்களூரு அணி தொடரில் இருந்து வெளியேறியது. இன்று நடக்கும் இரண்டாவது தகுதிச்சுற்றில் ரிஷாப் பந்தின் டெல்லி அணியும், இயான் மார்கனின் கொல்கத்தா அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இவ்விரு அணிகளும் மொத்தம் 28 போட்டிகளில் மோதியுள்ளது. இதில் டெல்லி 13,கொல்கத்தா 15 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இரு அணிகளும் கடைசியாக மோதிய நான்கு போட்டிகளில் தலா இரண்டு வெற்றிகளை பெற்றுள்ளது.