தெலுங்கு சினிமாவில் வில்லனாக மாஸ் காட்டிவரும் விஜய்!!!

தமிழில் ஹீரோவாக கலக்கிவரும் விஜய் சேதுபதி இவர் நடிப்பில் வருடத்திற்கு நான்கு ஐந்து படங்களுக்கு மேல் ரிலீசாகிறது. ஒரு படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே அடுத்தடுத்து இடங்களில் கமிட்டாகி பிசியாக நடித்துவருகிறார். ஹீரோவாக மட்டுமின்று வில்லன் குணச்சித்திர கதாபாத்திரம் என தனது நடிப்பில் மிரட்டி வருகிறார்.


சமீபகாலமாக விஜய் சேதுபதிக்கு தெலுங்கில் வில்லன் கதாபாத்திரத்தில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. தெலுங்கில் சிரஞ்சீவி நடிப்பில் வெளியான சைரா நரசிம்ம ரெட்டி படத்தில் நடித்து அறிமுகமானார். அந்த படத்திற்கு பிறகு “உப்பென்ன” படத்தில் வில்லனாக நடித்து அங்கும் ஒரு ரவுண்டு வந்துகொண்டிருக்கிறார்.


இந்நிலையில், கேஜிஎப் படத்தின் இயக்குனர் அடுத்து தெலுங்கில் ஜூனியர் என்டிஆர் வைத்து இயக்க விருக்கும் படத்தில் வில்லனாக விஜய் சேதுபதியிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அவரும் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளாராம்.

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course