
இதுவரை கொரோனா காரணமாக 1,40,74,564 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 1,73,123 ஆக உள்ளது.இதனால் தொல்லியல் துறையின் கீழ் உள்ள நினைவுச் சின்னங்கள், அருங்காட்சியகங்கள் ஆகியவை மே 15ம் தேதி வரை மூட வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து மத்திய மந்திரி பிரகலாத் சிங் படேல் தனது டுவிட்டர் பக்கத்தில்,“கொரோனா பரவல் அதிகரிப்பைத் தொடர்ந்து தொல்பொருள் துறையின் கீழ் உள்ள அனைத்து நினைவுச் சின்னங்கள் மற்றும் அருங்காட்சியகங்கள் மே 15ம் தேதி வரை அல்லது அடுத்த உத்தரவு வரும் வரை உடனடியாக மூடுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது” என்று பதிவிட்டுள்ளார்.
Puthiyathalaimurai TV Thanthi TV News18 Tamil Nadu News7 Tamil Sathiyam TV Sun News Kalaignar News News J TV Jaya Plus News Captain TV News Polimer News







