
மருத்துவம், பொறியியல் படிப்புகளுக்கு போல, கலை, அறிவியல் படிப்புகளுக்கும் நுழைவுத்தேர்வு கொண்டு வரப்படும் என தகவல்கள் வெளியான நிலையில், இதுபோன்ற திட்டம் ஏதும் இல்லை, ஆனால் ஆலோசிக்கப்பட்டு வருகிறது என ஏஐசிடிஇ (AICTE ) தலைவர் அனில் சகஸ்ரபுதே தெரிவித்துள்ளார்.
புதிய கல்விக் கொள்கையின் கீழ் கலை, அறிவியல் உள்ளிட்ட அனைத்து உயர்கல்வி படிப்புகளுக்கு நுழைவுத்தேர்வு கட்டாயம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, கலை அறிவியல் கல்லூரியில் படிப்புக்கும் நீட் தேர்வு கொண்டு வரப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

அதுகுறித்து ஏஐசிடிஇ தலைவர் விளக்கம் அளித்துள்ளார். கலை, அறிவியல் மற்றும் பொறியியல் படிப்புகளில் சேர பொது நுழைவுத்தேர்வு நடத்தும் திட்டம் எதுவும் தற்போது இல்லை. ஆனால், அது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது என்று கூறியுள்ளார்.

11, 12-ம் வகுப்பில் எந்த பாடத்தை அடிப்படையாகக் கொண்டு படித்தால், வேறு வகையான உயர்கல்வி படிப்புகளில் சேரலாம். ஆனால் அவ்வாறு சேரும் முன், குறிப்பிட்ட உயர்கல்வி படிப்பு தொடர்பான பாடப் பிரிவுகளிலும் அந்த மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று கூறினார்.







