வாக்காளர்களை கவர புதிய திட்டம் – “முக கவசம்”.

 

தமிழகம் போல் கேரளாவிலும் அடுத்த மாதம் ஏப்ரல் 6 தேதி சட்டசபை தேர்தல் நடக்கவிருக்கிறது. தேர்தலுக்காக வேட்பாளர்கள் வாக்காளர்களை கவர புதிய திட்டங்களை சிந்தித்தும் அறிவித்தும் வருகின்றனர். அதே போல் பிரச்சாரத்திற்கு சொல்வோர்க்கு தேர்தல் ஆணையம் பல்வேறு விதிமுறைகளை அறிவித்து வருகிறது.

 

தேர்தலுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் கேரளாவில் கடந்த ஆண்டு ஏற்பட்ட கொரோனா நோய் தொற்று இன்னும் கட்டுப்பாட்டில் வரவில்லை. இதனால் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.

 

பிரச்சாரத்தின் போது வேட்பாளரும் அங்கு கூடி இருக்கும் மக்களும் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வேட்பாளர்கள் தங்கள் கட்சியின் சின்னங்களை முக கவசத்தில் தயாரித்து உள்ளனர்.அந்த முக கவசங்கள் அணிந்தபடியே பிரச்சாரத்திற்கு செல்கின்றனர்.

 இதை தொடர்ந்து கட்சி சின்னங்களை பதிவிட்ட முக கவசங்களை வேகமாக தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். கேரளாவில் முகக்கவசம் தயாரிப்போரும் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனராம். 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

tamilbusinessideas.com