மீண்டும் ஹீரோயின் மாற்றம் குழப்பத்தில் இருக்கும் கமல் ???

திரிஷ்யம் 2 படத்தின் ரீமேக்கில் கமல் நடிகை கவுதமிக்கு பதிலாக யாரை நடிக்க வைக்கலாம் என்ற குழப்பத்தில் உள்ளாராம். பாபநாசம் படத்தின் வெற்றிக்கு பிறகு அதன் இரண்டாம் பக்கத்தில் அதாவது பாபநாசம் 2 படத்தில் எந்த நடிகையை ஒப்பந்தம் செய்யலாம் என்று பெரும் குழப்பத்தில் கமல் மற்றும் பட குழுவினர்.


முதல் பக்கத்தில் நடித்த கவுதமியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இரண்டாம் பக்கத்தில் கவுதமி கதாபாத்திரத்தில் மலையாளத்தில் நடித்த மீனாவை ஒப்பந்தம் செய்யலாம் என்று பேச்சு வார்த்தை நடந்துள்ளநிலையில் தற்போது மீண்டும் ஹீரோயினை மாற்ற சிந்தித்து வருகின்றனராம்.


படக்குழுவினர் மீனாவிற்கு பதிலாக நதியாவை நடிக்க வைக்கலாம் என்று பரிந்துரை செய்துள்ளனர். இந்நிலையில், இப்போது நதியைவிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. நதியா ஒப்புக்கொண்டுவிட்டால் பாபநாசம் 2 படத்தில் கமலுக்கு புதிய ஜோடியாக இருக்கும்.

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top