கார்த்தி நடித்திருக்கும் “சுல்தான்” இந்த படத்தை பாக்யராஜ் கண்ணன் இயக்கியுள்ளார். இவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான “ரெமோ” படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.

மேலும், இந்த படத்தின் மூலம் தமிழில் நேரடியாக அறிமுகமாகிறார் நடிகை ராஷ்மிகா மந்தன. இந்த படத்தை ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் எஸ்.ஆர். பிரகாஷ் பாபு மற்றும் எஸ்.ஆர். பிரபு தயாரித்துள்ளனர். இந்த படம் அடுத்த மாதம் ஏப்ரல் 2 தேதி தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நாளில் வெளியிட உள்ளார்களாம். அதை தொடர்ந்து இந்த படம் ஹாட்ஸ்டார் தளத்தில் ஒளிபரப்ப உள்ளார்களாம்.







