இன்றைய ராசிபலன் 13-04-2021

மேஷம்:

ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் எதையோ இழந்ததைப் போல் ஒருவித கவலைகள் வந்து நீங்கும். நீங்கள் சிலருக்கு நல்லது சொல்லப் போய் அது சச்சரவில் போய் முடியும். வியாபாரத்தில் வேலையாட்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் உயர் அதிகாரியைப் பற்றி விமர்சிக்க வேண்டாம். கவனம் தேவைப்படும் நாள்.

 

ரிஷபம்:  

அனாவசிய செலவுகளைத் தவிர்க்கப் பாருங்கள். திடீர் பயணங்கள் இருக்கும். குடும்பத்தில் சின்ன சின்ன வாக்குவாதங்கள் வந்து நீங்கும். வியாபாரத்தில் பாக்கிகளை கறாராகப் பேசி வசூலிப்பீர்கள். உத்தியோகத்தில் அதிருப்தி உண்டாகும். கடினமாக உழைக்க வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்; அதிர்ஷ்ட எண்கள்:1, 3, 9.

மிதுனம்:

குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். சொத்து வாங்குவது குறித்து யோசிப்பீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. புது வேலை அமையும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். சிறப்பான நாள்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்; அதிர்ஷ்ட எண்கள்:1, 3, 5,9.

கடகம்:

தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் வளர்ச்சிக்கு சாதகமாக இருப்பார்கள். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் புது முடிவுகள் எடுப்பீர்கள். உத்தியோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். சிந்தனை திறன் பெருகும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்; அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9.

சிம்மம்:

புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். சாதிக்கும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு; அதிர்ஷ்ட எண்கள்: 2,5.

கன்னி:

சந்திராஷ்டமம் இருப்பதால் வேலைச்சுமை இருந்துக் கொண்டேயிருப்பதாக ஆதங்கப்படுவீர்கள். சில சிறுசிறு ஏமாற்றங்கள் வந்து போகும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்தியோகத்தில் அலட்சியம் வேண்டாம். தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்க வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு; அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9.

துலாம்:

பிள்ளைகளால் மகிழ்ச்சியும் உறவினர்களால் ஆதாயமும் உண்டு. விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். தாயார் ஆதரித்துப் பேசுவார். பயணங்கள் சிறப்பாக அமையும். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரம் தழைக்கும். உத்தியோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும். நன்மை கிட்டும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு; அதிர்ஷ்ட எண்கள்: 3, 5,7.

விருச்சிகம்:

குடும்பத்தில் மனம் விட்டுப் பேசி மகிழ்வீர்கள். விருந்தினர் வருகையால் வீடு களைக்கட்டும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் முடியும். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்தியோகத்தில் அதிகாரிகளால் நன்மை உண்டு. தொட்டது துலங்கும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்:மஞ்சள், சிவப்பு; அதிர்ஷ்ட எண்கள்: 1, 6,9.

தனுசு:

வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். அனாவசிய செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் திருப்தி உண்டாகும். கனவு நனவாகும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை; அதிர்ஷ்ட எண்:2,6,9.

மகரம்:

திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். மனதிற்கு இதமான செய்தி வரும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை; அதிர்ஷ்ட எண்கள்:  5, 9.

கும்பம்:

உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலையை பகிர்ந்து கொள்வார்கள். அரசால் ஆதாயம் உண்டு. வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். வியாபாரத்தில் சில மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் சூழ்சுமங்களை சொல்லித் தருவார்கள். நல்லன நடக்கும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, நீலம்; அதிர்ஷ்ட எண்கள்: 1,2,7.

மீனம்:

கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். அழகும் இளமையும் கூடும். மாறுபட்ட அணுகு முறையால் பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் மதிக்கப்படுவீர்கள். தடைப்பட்ட வேலைகள் முடியும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்:வெள்ளை, மஞ்சள், பச்சை; அதிர்ஷ்ட எண்கள் 1,3,5.

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course