சளி, இருமல், இளைப்பு போன்ற நோய்களுக்கு ஆங்கில மருந்துகளைவிட இயற்கையாக கிடைக்கும் மூலிகை வகை மருந்துகள், சிறந்த நிவாரணமாகும். இதில் சளியை போக்கு இயற்கை மருந்தாக திப்பிலி பயன்படுகிறது.

திப்பிலி என்பது அரிய வகை மூலிகை மருந்து வகைகளில் ஒன்றாகும். எல்லா நாட்டு மருந்து கடைகளிலும் எளிதாக கிடைக்கும்.
* திப்பிலி மூச்சு உறுப்புகளின் நோய்கள், வயிற்றுப்போக்கு, தோல் நோய்கள், பித்தநீர்ப்பை நோய்கள், ஆகியவற்றை போக்க பயன்படுத்தப்படுகிறது.
*திப்பிலி பொடியை எடுத்து தேனில் கலந்து கொடுத்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உள்ள தொண்டை கட்டு, கோழை, குரல் கம்மல், உணவில் சுவையின்மை ஆகியவை தீரும்.
*தொடர்ந்து சளித்தொல்லையால் அவதிப்படுபவர்கள், திப்பிலியை எடுத்துக் கொண்டால் உடனே சளி நீங்கும் இதனால், எந்த பக்க விளைவும் ஏற்படாது. மேலும் சுவாச குழாயில் ஏற்பட்டுள்ள நாள்பட்ட சளி அடைப்புகள் நீங்கும்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த திப்பிலியை கொண்டு ரசம் செய்து பார்ப்போம்!

தேவையான பொருட்கள் :
அரிசி திப்பிலி – 10
கண்ட திப்பிலி
மிளகு – 10
காய்ந்த மிளகாய் – 1
புளி – நெல்லிக்காய் அளவு
சீரகம், கடுகு – தலா 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
பெருங்காயத்தூள் – சிறிதளவு
எண்ணெய் – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

செய்முறை:
*அரிசி திப்பிலி, கண்ட திப்பிலி, மிளகு, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை எண்ணெய் விட்டு வறுக்கவும்.
*வறுத்தவற்றை சிறிது தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைக்கவும்.
*அரைத்த விழுதுடன் புளித்தண்ணீரை கலந்து உப்பு தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
*சீரகம், கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூளை எண்ணெயில் தாளித்து அதில் கரைசலை ஊற்றி இறக்கவும்.
சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம்.
Puthiyathalaimurai TV Thanthi TV News18 Tamil Nadu News7 Tamil Sathiyam TV Sun News Kalaignar News News J TV Jaya Plus News Captain TV News Polimer News







