அம்மை நோய்க்கான தீர்வுகள்…

மருத்துவர்கள் கூறுகையில், இந்த நோயால் பெரும்பாலும் குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் அதிக பாதிப்புக்கு உள்ளகிறார்கள் என்று ஆய்வுகள் கூறுகின்றன. கோடை காலத்தில் வைரஸ்கள்  இருவகைகளாக பிரிக்கப்படுகிறது.  ஒன்று வெப்பத்தை தாங்கக்கூடிய வைரஸ், மற்றறொன்று வெப்பத்தைத் தாங்க இயலாத வைரஸ். கோடை காலத்தில் வெப்பத்தைத் தாங்க முடியாத வைரஸ்கள் மூலம் சளி, இருமல், காய்ச்சல் போன்ற பிரச்சினைகள் உருவாகும். மேலும் ,அம்மை நோயை ஏற்படுத்தும் வைரஸ், வெப்பத்தைத் தாங்கக்கூடிய வைரஸ் ஆகும். இது சாதாரண பருவ நிலையிலும் பரவும் தன்மை கொண்டது. இந்நோய் கோடை காலத்தில் அம்மை அதிக தாக்கத்தை ஏற்படுத்தும்.

மேலும், அம்மை நோயின் அறிகுறியாக முதலில் காய்ச்சல் மற்றும் அதைத் தொடர்ந்து பசியின்மை, உடல் பலவீனம் போன்றவைகள் ஏற்படும். சின்னம்மையாக இருந்தால் உடலில் நீர்க்கட்டியைப் போன்ற சிறிய கொப்புளங்கள் தோன்றும்.  அவை கொஞ்சம் பெரிதாகி நீர் கோத்துக் காணப்படும். நிறம் மாறிக் கொப்புளங்களில் இருந்து நீர் வடியும். பின்னர், நீர் வறண்டு கொப்புளங்கள் உதிரும். கொப்புளம் உள்ள இடங்களில் வடு ஏற்படும். இது உடலில் அரிப்பு, தாங்க முடியாத வலி, தொடர்ந்து மிதமான காய்ச்சல் போன்ற பிரச்சினைகள் இந்த காலத்தில் இருக்கும். 7 முதல் 10 நாட்களுக்குள் கொப்புளங்கள் உலர்ந்து விடும்.

அம்மை தாக்கப்பட்டவர்களைத் தனிமைப்படுத்துதல்… 

இந்த நோய் உள்ளவர்களை வைத்தியர்கள் வந்து பார்க்க வசதியாக அந்தக் காலத்தில் அவர்களைக் கோவில்களில் தங்க வைப்பது மரபு . அதை பலர் இப்போதும் பின்பற்றுகிறார்கள். இந்த நோயைச் சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. உடல் வெப்பம் அதிகமாகி நுரையீரல் காய்ச்சல் (நிமோனியா), நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு மூளை காய்ச்சல், வயிற்றுப்போக்கு போன்ற மற்றப் பிரச்சினைகளையும் ஏற்படுத்தி விடலாம்.

இயற்கை மருத்துவம் கைகொடுக்கும்… 

எனவே,இந்த நோய்க்கு இயற்கை மருத்துவம் பெரிதும் கைகொடுக்கிறது. அம்மை நோயால் பாதிக்கப்பட்டவரை வேப்பிலையில் படுக்க வைப்பது வழக்கம், வேப்பிலை அரைத்துப் போட்டுக் கொள்வதுடன் விட்டுவிடக் கூடாது. அம்மை நோய் வந்தால் அதைக் குணப்படுத்த மருந்து இல்லை. எனினும் அதன் வீரியத்தை கட்டுப்படுத்தவும், அம்மை நோயால் வரக்கூடிய மற்ற நோய்களைத் தடுக்கவும் மாத்திரைகள் இருக்கின்றன.

நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும்.. 

இந்த நோயின்  மிகப்பெரிய  வலி  என்னவென்றால் கொப்புளங்கள் இது மிகுந்த வேதனையை கொடுக்கிறது. ஒருமுறை அம்மை நோய் வந்துவிட்டுப் போனால், பிறகு வாழ்நாள் முழுவதும் வராது என்று நம்புகிறோம். அது உண்மைதான், அம்மை நோய் அந்த அளவுக்கு நோய் எதிர்ப்புத் தன்மையை ஏற்படுத்திவிடும். அதேநேரம், நோய் எதிர்ப்புத் சக்தி குறைவாக இருப்போர், எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டவர்கள், காசநோய் உள்ளவர்கள் ஆகியோருக்கு, ஏற்கெனவே அம்மை நோய் வந்திருந்தாலும்கூட மீண்டும் வருவதற்கான சாத்தியம் அதிகம். இதேபோல குழந்தைகள், முதியவர்களுக்கு நோய் எதிர்ப்புத் தன்மை குறைவாக இருக்கும் என்பதால், அவர்களுக்கும் மீண்டும் வரலாம். இது கர்ப்பிணிகளை அம்மை நோய் தாக்கினால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மருத்துவர் ஆலோசனைப்படி மருந்துகள் உட்கொள்ள வேண்டும்.

காற்றில் எளிதாகப் பரவும்… 

குழந்தைகள்  அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். இந்த நோய்  எளிதாகப் பரவக்கூடிய நோய் என்பதால் எளிதில் மக்கள் பாதிக்கின்றனர். மேலும்,  பாதிக்கப்பட்டவர்கள் ஒருவர் பயன்படுத்திய பொருட்களைப் மற்றோருவர் உபயோகிக்கக்கூடாது. இருமல், தும்மல் மூலமும் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து வைரஸ் பரவும். பிறகு,ஒருவர் அம்மை நோயால் முழுமையாகத் தாக்கப்படுவதற்கு முந்தைய முதல் மூன்று நாட்களும், வந்து சென்ற பின் இரண்டு நாட்களும் தான் அம்மை நோய் வேகமாகப் பரவும். எனவே, அம்மை நோயால் பாதிக்கப்பட்டவரை அப்போது தனிமைப்படுத்தி வைக்க வேண்டும்.

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published.

scroll to top

tamilbusinessideas.com