வெயிட் குறைக்க வேண்டுமா? முதலில் இதை ஃபாலோ பண்ணுங்க !

உலகம் முழுவதும் உள்ள ஒரே வியாதி உடற்பருமன் தான். அதிலும் அரிசி உணவு அதிகம் உண்ணும் தென்னிந்திய மக்கள் உடற்பருமன் மற்றும் அது தொடர்பான நோய்களால் பாதிக்கப்படுவது ஆரோக்கிய வாழ்வுக்கான சவாலாக உள்ளது. மருத்துவர்களின் அறிவுரை என்னவென்றால் உடற்பருமனை குறைக்க வேண்டும் என்பது தான். எடை குறைக்கும் முயற்சியில் இறங்கும்வர்கள் முறையான டயட்டும் , அதற்கேற்ற உடற்பயிற்சிகளையும் கடைபிடிக்கும் போது ஆரோக்கியமான முறையில் உடல் எடை குறையும். உடல் எடை குறைக்க உதவும் ஒவ்வொரு அறிவுறுத்தல்கள் பின் உள்ள அறிவியல் விளக்கங்களை தெரிந்து கொள்வோம்.

* வாரம் நான்கு முறை எடை தூக்கும் பயிற்சி அவசியம்:

உடற்எடை குறைப்பவர்களுக்கு உணவுக்கட்டுப்பாடு மட்டும் அல்லாமல் உடற்பயிற்சி , நடைப்பயிற்சி என அவர்களின் உடல்நலத்திற்கு ஏற்ப அறிவுறுத்தப்படும்.

அறிவியல் காரணம் :

உடல் எடை குறைய ஆரம்பிக்கும் போது முதலில் கொழுப்பு கரையும் பிறகு தசைகள் கரையும். இதன் விளைவாக தோல் தளர்ச்சி அடையும் போது உளவியல் ரீதியாக தனது அழகினைப்பற்றிய தாழ்வு மனப்பான்மை வரும். வாரம் நான்கு முறை எடை தூக்கும் பயிற்சி செய்யும் போது உடல் மெட்டபாலிசம் தூண்டப்படுகிறது மேலும் தசைகள் இறுகி உடற்கட்டு உருவாக்குகிறது.

* வாரம் நான்கு நாட்களுக்கு நடைப்பயிற்சி அவசியம் :

குறைந்தபட்சம் ஒரு வாரத்திற்கு நான்கு நாட்களுக்கு மட்டுமாவது அரைமணிநேரம் நடைப்பயிற்சி அவசியம் என அறிவுறுத்துகின்றனர்.

அறிவியல் காரணம்:

தினசரி நடைப்பயிற்சி என்பது சர்க்கரை நோய், இதய நோய்களை தள்ளிப்போடுவதோடு அல்லாமல் எடையும் குறையும். நடைப்பயிற்சியால் எலும்புகளுக்கு உறுதி கிடைக்கிறது மேலும் சுவாசம் மேம்படுகிறது, பெருகி வரும் வியர்வை மூலம் உடற் கழிவுகள் வெளியேறும்.மெட்டப்பாலிசம் தூண்டப்படுவதால் செரிமானக் கோளாறுகள் நீங்கும்.ஒட்டுமொத்த உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்வு தரும் செலவில்லாத உடற்பயிற்சி நடைப்பயிற்சி தான்.

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published.

scroll to top

Tamil Business Ideas