இஞ்சியை பற்றி இந்தியர்களுக்கு தனியே வகுப்பு எடுக்க வேண்டியதில்லை. நம் சமையல்களில் இஞ்சி ஏதோவொரு வகையில் சேர்க்கப்படுகிறது.நமது பாரம்பரிய மருத்துவமும் இஞ்சியை உணவாகவும், மருந்தாகவும் பயன்படுகிறது.

இஞ்சியின் நன்மைகள்:
*இஞ்சி வயிற்றில் உண்டாகும் வாயுத்தொல்லைகளை நீக்குகிறது.
*கர்ப்பிணிகள் சிலருக்கு கர்ப்பக்காலத்தின் ஆரம்பக்காலத்தில் இடைவிடாத தலைசுற்றல், வாந்தி வரும். மருத்துவர்கள் இதற்கு பரிந்துரைக்கும் ஆண்டி-வாமிட்டிங் மருந்துகள் வயிற்றில் உள்ள கருவுக்கு பிறப்பு குறைபாடுகளை ஏற்படுத்தும் ஆபத்து உள்ளது. இதற்கு தீர்வாக இஞ்சி தட்டி லெமன் ஜீஸ் , இஞ்சி டீ என குடிக்க கொடுப்பார்கள்.

இஞ்சியும் மூட்டுவலியும் :
*கடும் ஆர்த்ரைட்டிஸ் வலியால் அவதிபட்டவர்களை இரு பிரிவாக பிரித்து ஒரு பிரிவுக்கு இஞ்சியும் இன்னொரு பிரிவுக்கு எதுவும் கொடுக்காமல் சோதனை நடத்தியதில் இஞ்சி சாப்பிட்ட குழுவுக்கு வலியும், முடமும் கடுமையாக குறைந்து இருந்தன. எந்த அளவு? 100% என்பது உச்சகட்ட வலி, 100% என்பது உச்சகட்ட முடம் என வைத்துக்கொண்டால் ஆய்வு துவங்குமுன் இஞ்சி குழுவுக்கு சுமார் 75% வலியும், முடமும் இருந்தன. ஆறுமாதத்தில் இது 41% ஆக குறைந்தது.
*அதுபோக முட்டிகளில் இருந்த வீக்கமும் கணிசமாக குறைந்தது. இந்த அளவு முன்னேற்றத்தை ஆறு மாதத்தில் அல்ல, ஆறு வருடத்தில் அடைய பல மாத்திரைகளை விழுங்கி, பல பக்க விளைவுக ைசந்திக்க வேண்டும் என்பது குறிப்பிடதக்கது.ரெண்டு ரூபாய் இஞ்சி வாங்கி சாப்பிட்டால் இந்த தொல்லை எதுவும் கிடையாது.
*இஞ்சி ஆர்த்ரைட்டிஸ் வலியை மட்டுமல்ல…இன்ஃப்ளமேஷனால் (உள்புண்) அதாவது வீக்கங்களால் வரும் எண்ணற்ற பாதிப்புக்களையும் குணப்படுத்தும். இஞ்சியில் உள்ள ஜிஞ்சரால் உடலில் நைட்ரிக் அமிலம் சுரப்பதை மட்டுப்படுத்துகிறது. இஞ்சியானது மூட்டுகளில் வீக்கத்தை ஏற்படுத்தும் பல வேதியியல் பொருட்களை (உதா: சைடோகின், கெமோகின்) உடல் உற்பத்தி செய்வதை தடுக்கிறது.
மலக்குடல் புற்றுநோய்க்கு எதிரி :
*ஆய்விற்கு எலிகளை இருபிரிவாக பிரித்தார்கள். இரன்டு எலிகளுக்கும் ஊசிமூலம் மலக்குடல் கான்சர் செல்கள் செலுத்தப்பட்டன. ஒரு பிரிவு எலிகளுக்கு ஜிஞ்சரால் அதாவது இஞ்சியில் உள்ள வேதிப்பொருள் தொடர்ந்து வழங்கபட்டது. இன்னொரு பிரிவு எலிகளுக்கு ஜிஞ்சரால் வழங்கபடவில்லை.
*15 நாட்களில் ஜிஞ்சரால் உட்கொள்ளாத எலிகளில் 13 எலிகளுக்கு டியூமர்கள் தோன்றின. இஞ்சி உட்கொண்ட எலிகளில் 4க்கு மட்டுமே டியூமர்கள் தோன்றின. அதிலும் அவற்றின் டியூமர் கட்டிகளின் அளவுகள் சிறிதாக இருந்தன…
.*38 நாள் கழித்தும் ஜிஞ்சரால் உட்கொன்ட எலிகளில் ஒரு எலிக்கு புற்றுநோய் கட்டிகள் தோன்றவில்லை. புற்றுநோய் கட்டிகளின் அளவு ஒரு குறிபீட்ட அளவை அடைந்தவுடன் அந்த எலிகளை கொல்வதாக முடிவு இருந்தது.
*49வது நாளில் ஜிஞ்சர் உட்கொள்ளாத எலிகள் அனைத்தின் டியூமரும் அந்த குறிப்பிட்ட அளவை அடைந்ததால் கொல்லபட்டுவிட்டன. ஜிஞ்சர் உட்கொண்ட எலிகளில் 12ன் டியூமர் அளவு 49வது நாளில் பாதி அளவே இருந்தன.
*இந்த ஆய்வுமுடிவு மனிதர்களுக்கும் பொருந்தும் என வைத்துக்கொண்டால் மலக்குடல் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் உள்ள அனைவரும் இஞ்சி உட்கொண்டால் அவர்களில் மூன்றில் இருபங்கு மனிதர்கள் கான்சர் வராமல் தப்பிக்கலாம். இஞ்சியின் மூலம் 90% நபர்களின் ஆயுள் அதிகரிக்கும். அனைவருக்கும் புற்றுநோய் வீரியம் குறையும்.
*மலக்குடல் புற்றுநோய் கிருமிகள் மீதான இஞ்சியின் விளைவுகள் கீமோதெரபி சிகிச்சை யின் மூலம் கிடைக்கும் விளைவுக்கருகே வந்ததாக ஆய்வுகள் கூறுகின்றன. கர்ப்பபை புற்றுநோய் டையும் இஞ்சி எதிர்த்து போரிடுவதாக கண்டறியபட்டுள்ளது
இஞ்சியை சமைத்தும் உண்ணலாம். இஞ்சி டீ வைத்தும் பருகலாம். இஞ்சியை அரைத்து/பொடியாக்கி உணவுக்கு மேலே தூவி உண்பதும் சிறந்தது.
Puthiyathalaimurai TV Thanthi TV News18 Tamil Nadu News7 Tamil Sathiyam TV Sun News Kalaignar News News J TV Jaya Plus News Captain TV News Polimer News