முகத்தில் உள்ள பூனை முடிகளை நீக்க வேண்டுமா?

பெண்களின் கவலைகளில் ஒன்று பளபளப்பான சருமம் இல்லையே என்பது தான். சுற்றுச்சூழலால் பெரிதும் பாதிப்பது முகம் தான். குளிர் மற்றும் வெயில் காலங்களில் முகத்தில் உள்ள சருமம் பொலிவிழந்து விடுகிறது. இதற்கு பல்வேறு விதமான ஃபேஸ் பேக் – face pack இருந்தாலும் சருமத்திற்கு தேவையான சத்துக்கள் நிறைந்து உள்ள அகார் அகார் போன்ற இயற்கையான பொருட்கள் கொண்டு செய்யும் ஃபேஸ் பேக் பற்றி தெரிந்து கொள்வோம்.விலை மலிவும் எளிதாக கிடைக்கும் பொருள் என்பதால் அனைவரும் பயன்படுத்தி பார்க்கலாம்.
 

அகார் – அகார் என்பது என்ன?

அகார் – அகார் என்பது சிவப்பு நிற ஆல்காக்களில் இருந்து பெறப்படும் கடல் பாசி வகையைச்சேர்ந்தது. இதில் உள்ள புரதமானது அகரோ பெக்டோஸ் எனப்படுகிறது.இதில் உள்ள புரதங்கள் மற்றும் நுண்ணாட்டச்சத்துக்கள் சருமத்திற்கு தேவையான ஒன்று தான். இதனை யொத்த ஜெலட்டின் என்பது விலங்குகள் , பறவைகள் மற்றும் மீனின் எலும்பு ,மஜ்ஜைகளில் இருந்து பெறப்படுகிறது. ஒரு ஸ்பூன் அகார் – அகார் என்பது எட்டு ஸ்பூன் ஜெலட்டினுக்கு சமம். ஆகவே அகார் – அகார் கிடைக்கும் போது அதனை பயன்படுத்துங்கள்.
 

அகார்- அகார் ஃபேஸ் பேக்

ஒரு டேபிள் ஸ்பூன் அகார் – அகார் உடன் ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் பால் சேர்த்து கலக்கவும். நேரடியாக அடுப்பில் வைத்து சூடாக்கினால் ஜெலட்டின் இறுகி விடும் ஆகவே டபுள் பாயிலிங் (double boiling) முறையில் சூடு செய்யவும்.
 

டபுள் பாயிலிங் முறை :

ஒரு வாயகன்ற பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க வைக்கவும். அதனுள் அகார் அகார் கலவை உள்ள பாத்திரத்தை வைத்து கரண்டியால் கலக்கவும். தேவையான அளவுக்கு உருகி பேஸ்ட் போல கிடைக்கும். இதனை பொறுக்கும் சூட்டில் புருவம் , கண்களைச் சுற்றி தவிர முகத்தின் பிற பகுதிகளில் தடவி ஊற விடவும்.
மெல்ல இந்த லேயர் காய்ந்ததும் முடிக்கு எதிர் திசையில் இழுக்கவும். பூனை முடிகள் , இறந்த செல்கள் அனைத்தும் ‌ஒட்டிக்கொண்டு வந்து விடும். இது நல்ல ப்ளீச் செய்தது   போல இருக்கும்.
 
 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course