பாலூட்டும் இளந்தாய்மார்கள் கவனிக்க வேண்டியவை!

தலைப்பிரசவம் அதுவும் அருகில் பெரியவர்கள் துணை இல்லாமல் இருக்கும் போது சின்ன விஷயங்களுக்கு கூட மனம் தடுமாறும்.ஒவ்வொரு மாற்றங்களையும் புரிந்து கொள்வது நல்லது.

மார்பகத்தில் இந்த மாற்றங்களை உணர்ந்தால் மருத்துவரை அணுகவும்.

* மிதமான காய்ச்சல்
* சரியான நேரத்தில், தேவையான அளவு பால் வராமலிருப்பது
* மார்பு அழுத்தப்படுவது போன்ற உணர்வு
* மார்பின் குறிப்பிட்ட ஏதாவதொரு பகுதியில் வலி எடுப்பது
* மார்பில் சிறிதான கட்டிக் காணப்படுவது,
* மார்புப்பகுதி சிவந்து காணப்படுவது .
 

பாலூட்டுவதால் கர்ப்பப்பை சுருங்குகிறது :

தாய்ப்பால் கொடுக்கும்போது, `ஆக்ஸிடோஸின்’ ஹார்மோன் (Oxytocin Hormone) அதிகம் சுரக்கும். கர்ப்ப காலத்தில் விரிந்திருந்த கர்ப்பப்பை, சுருங்கும். பிரசவத்தின்போது ஏற்பட்ட ஹார்மோன் மாற்றங்கள் யாவும் சரியாகத் தொடங்கும். எனவே, தாய்மார்கள் எந்தச் சூழலிலும் பால் கொடுப்பதைத் தவிர்க்கக் கூடாது.

மார்பகத்தொற்றுகள் :

குறிப்பாக, மார்பைச் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். மார்புப்பகுதியில் ஏதேனும் தொற்று ஏற்பட்டால், தாய், சேய் இருவருக்குமே ஆபத்து. அதன் வெளிப்பாடும் வலி உணர்வாகவே இருக்கும். எனவே, எந்தச் சூழலிலும், வலியை உதாசீனப்படுத்தக் கூடாது. தொற்றால் பாதிக்கப்பட்ட தாய்மார்களுக்கு, ஐ.என்.டி. வகை அறுவைசிகிச்சைகள் அளிக்கப்படும். அந்த சிகிச்சைகள் முடிந்தபிறகு, அவர்கள் மீண்டும் தாய்ப்பால் கொடுக்க அறிவுறுத்தப்படுவார்கள். ஹெச்.ஐ.வி. இருப்பவர்கள் தவிர மற்ற அனைத்து தாய்மார்களும், தாய்ப்பால் கொடுக்கலாம். குழந்தைக்கு `லேக்டோஸ் இன்டாலெரென்ஸ்’ (Lactose intolerance) என்ற பிரச்னை இருந்தால், தாய்ப்பால் கொடுக்கவேண்டாம் என அறிவுறுத்தப்படும். மற்ற அனைத்துக் குழந்தைக்கும், தாய்ப்பால் அவசியம்.
பால் கொடுக்கும்போது சின்னச் சின்ன பிரச்னைகள் ஏற்படுவது இயல்புதான். அப்படியான சூழல்களில் சரியான மருத்துவ ஆலோசனையோடு அப்பிரச்னைகளுக்கான தீர்வை நோக்கி நகரவேண்டும். தாய்ப்பால் தருவதால்தான் வலி ஏற்படுகிறது என நினைத்துக்கொண்டு, அதை அப்படியே நிறுத்துவது மிகவும் தவறான செய்கை”ட வேண்டாம். ஒரு காம்பில் பால் சுரந்து முடிந்தபிறகு, மற்றொரு பக்கம் மாற்றவும். ஒருவேளை, குழந்தை முதல் மார்பில் பால் குடிக்கும்போது தூங்கிவிட்டால், விழித்தபின் மற்றொரு பக்கம் கொடுக்கவும்.
எனவே, பால் கொடுக்கக் கொடுக்க, அதைக் குழந்தை குடிக்கக் குடிக்க பாலின் சுரப்பு சீராகும். அதேபோல `பால் கொடுக்க வேண்டும்’ என்ற எண்ணம் தாய்க்கு இருந்தால்தான் தேவையான அளவு பால் சுரக்கும். குழந்தைப் பிறந்து முதல் சில நாள்களுக்கு, தாய்மார்களுக்கு `தாய்ப்பால் கட்டு’ பாதிப்புகள் ஏற்படுவது இயல்புதான். முடிந்தவரை அப்படியான சூழல் ஏற்படாமல் பார்த்துக்கொள்வது நல்லது. ஒருவேளை ஏற்பட்டாலும், உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறவும். இதுதவிர கீழ்க்காணும் அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகவேண்டும்.

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published.

scroll to top

Tamil Business Ideas