வெங்காயம் சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா?

தினசரி நாம் சமையலில் பயன்படுத்தும் வெங்காயம் சுவைக்கு மட்டும் அல்ல அதன் மருத்துவப்பலன்களால் தான் உணவில் சேர்த்துக் கொள்கிறோம்.
* தீராத நெஞ்சு சளி மற்றும் வறட்டு இருமல் நீங்க பச்சை வெங்காயம் சாறு பயன்படும்.
* வெங்காயத்தை வதக்கிச் சாப்பிட, உஷ்ணத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும்.
*வெங்காயத்தைச் சுட்டு, சிறிது மஞ்சள், சிறிது நெய் சேர்த்து, பிசைந்து மீண்டும் லேசாகச் சுட வைத்து, உடையாத கட்டிகள் மேல் வைத்து துணியால் கட்ட, கட்டி உடனே பழுத்து உடையும்.
* வெங்காயச் சாறு, சில வயிற்றுக் கோளாறுகளை நீக்கும்.
*வெங்காயச் சாற்றை மோரில் விட்டுக் குடிக்க இருமல் குறையும்.
*வெங்காயச் சாற்றையும், வெந்நீரையும் கலந்து, வாய் கொப்பளித்து வர நோய் கிருமிகள் அழிந்துவிடும்.
*வெறும் வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவி வர, பல்வலி, ஈறுவலி பல் தொடர்பான நோய்கள் குணமாகும்.
*வெங்காயப்பூ, வெங்காயத்தைச் சமைத்து உண்ண, உடல் வெப்பநிலை சமநிலை மாறும்.
* வெங்காயத்தை வேகவைத்து, அதோடு தேன், கற்கண்டை சேர்த்துச் சாப்பிட, உடல் உறுதிப் பெறும்.
* வெங்காயத்தை வதக்கி தேன் விட்டு இரவில் சாப்பிட்டு, பின் பசும்பால் பருகும் போது ஆண்மை பெருகும்.
*வெங்காயத்தை வதக்கி, வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர, நரம்புத் தளர்ச்சி குணமாகும்.
* படை, தேமல் மேல் வெங்காயச் சாற்றைப் பூசிவர மறைந்துவிடும்.
* திடீரென மூர்ச்சையானால், வெங்காயத்தைக் கசக்கி முகரவைத்தால், மூர்ச்சை தெளியும்.
* வெங்காயச் சாற்றையும், தேனையும் கலந்து சேர்த்துச் சாப்பிட்டால், சீதபேதி நிற்கும்.
* பச்சை வெங்காயம் நல்ல தூக்கத்தைத் தரும். பச்சை வெங்காயத்தைத் தேனில் கலந்து சாப்பிடுவது நல்லது.
 * வெங்காயம் வயிற்றில் உள்ள சிறுகுடல் பாதையைச் சுத்தப்படுத்துகிறது.
 
 
 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Tamil Business Ideas