மஞ்சள் :
மஞ்சள் என்பது ஒரு கிருமி நாசினி, நுண்ணுயிர் எதிர்ப்பி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிரம்பி உள்ளது சமையலுக்கு மட்டும் அல்லாமல் மருந்தாகவும் பயன்படுகிறது.
சிறிய வெட்டுக்காயங்கள் முதல் தீப்புண்கள் வரை மஞ்சளை கொண்டு சிகிச்சையளிக்கலாம். நமக்கு ஏற்படும் சளி, இருமல், மூட்டு அழற்சி, கீல்வாதம், சரும நோய்கள், பருக்கள் மற்றும் பல்வேறு வயிற்று நோய்களையும் குணப்படுத்தும். மூளைத் தேய்வு நோயான அல்ஜீமர் தடுத்து, மதுபானம் அல்லது வலி நிவாரணிகளை தொடர்ச்சியாக பயன்படுத்தி வருவதால் ஏற்படும் கல்லீரல் பாதிப்பை குறைக்கும்.

லவங்கப்பட்டை :
லவங்கப்பட்டையில் பொட்டாசியம், கால்சியம், மாங்கனீஸ், இரும்பு, ஜிங்க், செம்பு போன்ற கனிமங்களும் வளமையாக உள்ளது. இது போக வைட்டமின் ஏ, நியாசின் மற்றும் பைரிடாக்சின் ஆகியவைகளும் உள்ளது. கீல்வாத வலி மற்றும் மாதவிடாய் வலிகளை குணப்படுத்த லவங்கப்பட்டை பயன்படுத்தப்படுகிறது.
லவங்கப்பட்டையை தொடர்ச்சியாக பயன்படுத்தி வந்தால் டைப் 2 சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு கட்டுப்படும் மேலும் கொலஸ்ட்ரால் அளவுகளை குறைக்கவும். கல்லீரலை பாதிக்கும் என்பதால் தினசரி எடுப்பதை தவிர்க்க வேண்டும்.
கிராம்பு :
கிராம்பில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிரம்பி உள்ளது. கிருமிநாசினி, அழற்சி எதிர்ப்பி, பெருங்குடலில் உள்ள வாயுக்களை வெளியேற்றுகிறது .கனிமங்கள் மற்றும் நார்ச்சத்துகள் அதிகமாக உள்ளது. பல்வலி, வாய் அல்சர், ஈறு புண்கள், மூட்டு அழற்சி, தசை வலிகள், உடல் வலி, செரிமானமின்மை, குமட்டல், வாந்தி, வாய்வு பிரச்சனை மற்றும் காலரா போன்ற பல்வேறு உடல்நல நிலைகளை தீர்க்கிறது.

ஏலக்காய் :
வாசனை மிக்க ஏலக்காயை “மசாலாக்களின் ராணி” என்றும் அழைக்கின்றனர்.
சுவாச துர்நாற்றம் மற்றும் வாய் அல்சருக்கும் ஏலக்காயை பயன்படுத்தலாம். கூடுதலாக, அதன் பெருங்குடலில் உள்ள வாயுக்களை வெளியேற்றுகிறது. மேலும் பசியை அதிகரித்து, மன அழுத்தத்தை குறைத்து, புத்துணர்ச்சியை ஏலக்காய் தரும்.
சீரகம் :
சீரகத்தில் இரும்பு, செம்பு, கால்சியம், பொட்டாசியம், மாங்கனீஸ், செலீனியம் மற்றும் ஜிங்க் போன்ற தாதுக்கள் மற்றும் நார்ச்சத்தும் நிறைந்து உள்ளது. செரிமானமின்மை போல அனைத்து செரிமான கோளாறுகளுக்கும் சிறந்த மருந்து. மேலும் இது உடலின் மெட்டபாலிசத்தை சீராக்கி, ஊட்டச்சத்துக்களை உடல் உறிஞ்சிடவும் உதவும்.
Puthiyathalaimurai TV Thanthi TV News18 Tamil Nadu News7 Tamil Sathiyam TV Sun News Kalaignar News News J TV Jaya Plus News Captain TV News Polimer News