பிரசவத்திற்க்கு பிறகு வந்த உடல் எடை குறைக்க வேண்டுமா? இந்த ஜீஸை குடியுங்கள்!

பொதுவாக உடல் எடை பெரும் பிரச்சினை என்றால், பிரசவித்த பெண்களுக்கு வரும் அதிக எடை நிறைய மன உளைச்சலைத்தரும்.

நிறைய உண்பதாலும் , சோம்பலான வாழ்வியல் என்பது முழுக்க முழுக்க காரணம் கிடையாது. சிலருக்கு ஹார்மோன் சம நிலையில்லாமல் உடல் பருமன், தைராய்டு போன்ற பிரச்சனைகளை உண்டாக்கிவிடும். சிலருக்கு தசைகளில் அதீத வளர்ச்சி உண்டாகி இடுப்பு பகுதிகளில் சதை போட்டுவிடும். இன்னும் சிலரோ சரியாக உடற்ப்யிற்சி இல்லாமல் சோம்பேறித்தனத்தால் உடல் பருமனாகிவிடுகிறார்கள்.உடல் பருமனை குறைக்க குழந்தை பிறந்ததும் பெண்கள் உடல் எடையை அவசியம் குறைக்க முயற்சித்தால் பின் வரும் நாட்களில் உடல் பருமனால் வரும் சர்க்கரை வியாதி, இதய நோய்களை தடுக்கலாம. வெறும் உடற்பயிற்சி மட்டும் அல்லாமல் தேவையற்ற கொழுப்புகளை கரைக்க உதவும் உணவுகளை உண்ண வேண்டும். விலை மலிவும் எளிதாக கிடைக்கும், ஊளைச் சதையைக் கரைத்து, உடல் பருமனைக் குறைக்கும், வாழைத்தண்டு அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். வாழைத் தண்டை எப்படி செய்வது என்று பார்ப்போம்.
 

வாழைத்தண்டு ஜூஸ் :

தேவையான பொருட்கள் : 

*வாழைத்தண்டு
*மிளகு
*சீரகம்
*பூண்டு
*எலுமிச்சை சாறு
*சிறிது உப்பு
 

செய்முறை :

வாழைத்தண்டை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி மிளகு, சீரகம், பூண்டு கொதிக்க வைத்து பிறகு எலுமிச்சை சாறு , உப்பு கலந்து காலை உணவுக்கு முன் குடித்து வந்தால் உடல் பருமன் நாளுக்கு நாள் குறைந்துவரும்.

வாழைத்தண்டு மோர்:

தேவையானவை :

*வாழைத்தண்டு
*மோர்
*இஞ்சி சாறு
*பெருங்காயத் தூள்
 

செய்முறை :

வாழைத் தண்டை துண்டு துண்டாக நறுக்கி சிறிதளவு மோரில் போட்டு மிக்சியில் அடித்து வடிகட்டி வைக்கவும். மீதமுள்ள தயிரைக் கடைந்து தாராளமாக நீர் ஊற்றி இதனுடன் வடிகட்டி வைத்துள்ள வாழை தண்டு சாற்றை கலக்கவும். இஞ்சிச்சாறு, உப்பு பெருங்காயத்தூள்சேர்க்கவும்.
இதனை குடிப்பதால் வயிற்று உப்புசம், வயிற்று கோளாறு நீங்கும். சிறு நீரக கற்கள் கரையும். உடல் பருமனாக உள்ளவர்கள்தொடர்ந்து பருகிவர பருமன் குறையும்

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course