உடலின் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு தயிரா?

 • தயிர் சருமத்திற்கு தேவையான சத்துக்கள் உள்ளதால் இதனை முகத்தில் கடலை மாவு மஞ்சள் கலவையுடன் சேர்த்து பூசும் போது முகம் பொலிவு பெறும்.
 •  பரீட்சைக்கு செல்லும் குழந்தைகள் தயிரும் சர்க்கரை சேர்த்து உண்ணும் போது இவை குழந்தைகளுக்கு ஆற்றல் தரும்.
 • பாலைத் தயிராக மாற்றும் லேக்டோபேசில்லஸ் பாக்டீரியா நோய்கள் வரக் காரணமான பாக்டீரியாவின் வளர்ச்சியை தடுக்கிறது.
 • தீவிர நெஞ்சு சளி என்றால் தயிருடன் சர்க்கரை சேர்த்து பருகலாம்.
 • ஒரு கை நிறைய தயிரை எடுத்து தலையில் நன்றாக தேய்த்தால் குளிர்ச்சி ஏற்படும் இதனால் தூக்கம் நன்றாக வரும்.

 

 

 • மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு மட்டும் அல்லாமல் செரிமானக் கோளாறுகள் போன்றவற்றிற்கு தயிர் தான் சிறந்த மருந்து.
 • மஞ்சள் காமாலை போன்ற நோய்களுக்கு தயிர் மற்றும் மோர் சிறந்த உணவு.
 • தயிரினை துணியில் கட்டி அதன் ஈரம் வடித்து அதனை கபாப் செய்து கொடுக்கலாம்.
 • சில தோல் வியாதிகளுக்கு மோரில் நனைந்த துணியை பாதித்த இடத்தில் கட்டி வருவது சிறந்த மருந்தாகும்.
 • சர்க்கரை நோயாளிகள் காய்கறிகளை தயிரில் கலந்து சாலட் போல உண்ணும் போது இரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறையும்.
 • வயிற்றுப்போக்கு வந்து அவதிப்படுகிறீர்களா பாலுக்கு பதிலாக தயிர் சேர்த்து கொள்ளவும்.
 • தயிருடன் ஆரஞ்சு பழத்தோல் பவுடரை குழைத்து முகத்தில் பூசி வந்தால் பருவால் வந்த தழும்புகள் மறைய ஆரம்பிக்கும்.
 • தயிர் மற்றும் தேன் சேர்த்து முகத்தில் தடவி வரவும்.தயிரில் உள்ள லாக்டிக் அமிலம் தேனில் உள்ள என்சைம்கள் சருமத்திற்கு பொலிவு தருகிறது.
 •   தயிர் உடலில் கார்டிசோல் எனும் ஹார்மோன் சேர்வதை தடுக்கும் இதனால் இரத்த அழுத்தம் , உடல் எடை அதிகரிப்பதை தடுக்கும்.

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published.

scroll to top

Tamil Business Ideas