ஆப்பிள் நீர் சத்து நிறைந்த அதேசமயம் 25கிராம் கார்போஹைட்ரேட் மற்றும் விட்டமின் சி, நார்ச்சத்து நிறைந்த கனி என்பது நாம் அறிந்ததே. நமது ஒரு நாளைக்கு தேவையான விட்டமின் சி யின் அளவில் 14% ஒரு ஆப்பிள் கனியில் கிடைக்கும் என்பது தான் வியக்க வைக்கும் செய்தி.இத்தன்னை சிறப்பு வாய்ந்த ஆப்பிளை சர்க்கரை நோயாளிகள் உண்ணலாமா? ஏன் உண்ணலாம் என்று பார்ப்போம்.

ஆப்பிளை ஏன் உண்ணலாம்?
ஒரு ஆப்பிளின் கலோரி மதிப்பு 95 இதில் உள்ள சர்க்கரை ப்ரக்டோஸ். இந்த வகை சர்க்கரை உடனடியாக இரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்காது.மேலும் ஆப்பிளில் உள்ள நார்ச்சத்து சர்க்கரை இரத்தத்தில் கலப்பதை தடுக்கிறது. தோலுடன் கூடிய ஆப்பிளை சாப்பிடும் போது தான் இந்த பலன் கிடைக்கும். ஆப்பிள் பழச்சாறு என்பது நார்சத்து சக்கையாக வெளியேற்றப்பட்ட வெறும் ப்ரக்டோஸ் மட்டுமே உள்ளது என்பதால் சர்க்கரை நோயாளிகள் தவிர்ப்பது நல்லது.
ஆப்பிள் சர்க்கரை நோயை தடுக்குமா?
தினசரி ஒரு ஆப்பிள் உண்பவர்களுக்கு சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்புகள் குறைவு என சமிபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதற்கு காரணம் ஆப்பிளின் தோலில் உள்ள பாலிஃபீனால்கள் கணையத்தை தூண்டி இன்சுலின் சுரப்பு அதிகரிக்கும் இதன் மூலம் இரத்தத்தில் உள்ள சர்க்கரை செல்களுக்கு செல்கிறது.ஆப்பிளில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்க உதவும் என்பது நன்மை தரும் விஷயம். என்னதான் ஆய்வுகள் ஆப்பிள் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்காது என்று கூறினாலும் ஒவ்வொரு நபரின் உடல்நிலை, வாழ்க்கை முறைகள் வேறு என்பதால் , ஆப்பிள் உண்டதும் உங்கள் சர்க்கரையின் அளவை பரிசோதித்து பாருங்கள். மேலும் ஒரு சிறிய ஆப்பிள் ஒரு நாளைக்கு அதுவும் தோலுடன் கூடிய ஆப்பிளை சாப்பிடவும்.
Puthiyathalaimurai TV Thanthi TV News18 Tamil Nadu News7 Tamil Sathiyam TV Sun News Kalaignar News News J TV Jaya Plus News Captain TV News Polimer News