வெள்ளரிக்காய் சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லதா?

வெள்ளரிக்காய் ஒரு குளிர்ச்சி மிகுந்த மற்றும் சாலட்டுகளில் பயன்படுத்தும் ஒரு காய் என்பது நாம் அறிந்ததே. வெள்ளரிக்காய் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்க உதவும் என்பது தான்.
வெள்ளரிக்காய் நார்ச்சத்து நிறைந்த காய். இதிலுள்ள நார்ச்சத்து உணவில் உள்ள கார்போஹைட்ரேட் மூலக்கூறுகள் வளர்சிதை மாற்றத்தின் போது க்ளுக்கோஸ் ஆக பிரிவதை தடுக்கிறது, இதனால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு பெருமளவு குறைகிறது.இதன் இன்னொரு பயனாக உடல் எடை குறைகிறது. வெள்ளரிக்காய் கூட்டு செய்து பார்க்கலாமே!
வெள்ளரிக்காயின் முழுப்பலன்களும் பெற வேண்டும் என்றால் அதனை பச்சையாக உண்ண வேண்டும். ஆனால் எப்போதாவது சமைத்து சாப்பிடுவது தவறில்லை.
 

தேவையான பொருட்கள்:

*வெள்ளரிக்காய் – 3
*பாசிப்பருப்பு – 1 கப்
*தேங்காய் துருவல் – 4 டீஸ்பூன்
*சீரகம் 1 டீஸ்பூன்
*வர மிளகாய் – 1
*கறிவேப்பிலை – சிறிதளவு
*கடுகு, உளுத்தம்பருப்பு
*பெருங்காயத்தூள் – சிறிதளவு
*எண்ணெய்
*உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

*வெள்ளரிக்காயை தோல் சீவி சிறு துண்டுகளாக நறுக்கவும்.
*பாசிப்பருப்பை குக்கரில் வைத்து வேகவிடவும்.
*காய்ந்த மிளகாய், சீரகம், தேங்காய் துருவல் மூன்றையும் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்.
*வெள்ளரித்துண்டுகளை உப்பு சேர்த்து வேகவிட்டு, அரைத்து வைத்திருக்கும் தேங்காய் மசாலா மற்றும் வேக வைத்திருக்கும் பாசிப்பருப்பு இரண்டையும் சேர்க்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் போட்டு தாளித்து விடவும்.
* கறிவேப்பிலையை கிள்ளிப்போட்டு நன்கு கலந்து, ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.
*சப்பாத்தி , சாதத்திற்கு தொட்டு சாப்பிட ஏற்றது.
 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course