அடர்த்தியான கருமையான கூந்தலுக்கு செம்பருத்தி பூ இருந்தால் போதும்!

செம்பருத்தி மலர் நமக்கு நன்கு தெரிந்த மலர் அதன் பலன்களும் நமக்கு தெரியும் என்றாலும் கூந்தல் வளர்ச்சிக்கு செம்பருத்தி பூக்களை என்ன செய்வது என்று பார்ப்போம்.

கூந்தல் தைலம் :

*ஐந்து இதழ்கள் உள்ள செம்பருத்திப் பூ பத்து முதல் இருபது எண்ணிக்கை அளவு அரைத்து 150 மி.லி நல்லெண்ணெய்யில் இட்டு காய்ச்சி வடிகட்டிய பிறகு தலைக்குத் தேய்த்தால் தலை முடி அடர்த்தியாக வளரும்.
*வாரம் ஒருமுறை செம்பருத்தி இலையை அரைத்து தலையில் தடவி அரை மணி நேரம் ஊறவைத்து சீயக்காய் போட்டு அலசவும். கூந்தல் அடர்த்தியாக வளரும். சைனஸ் தொந்தரவு உள்ளவர்கள் உடனே தலைமுடியை அலசவும்.
*கறிவேப்பிலை, சின்ன வெங்காயம் -4 உலர்ந்த செம்பருத்தி பூ சேர்த்து நன்றாக அரைத்து அத்துடன் பசும்பால் , நல்லெண்ணெய் சேர்த்து தலைக்குத் தேய்த்து குளித்தால் கூந்தல் கருமையான நிறத்துடன் வளரும்.
*கடுக்காய், செம்பருத்திப் பூ, நெல்லிக்காய் ஆகியவைகளை சம அளவு எடுத்து அரைத்து தேங்காய் எண்ணெய்யில் காய்ச்சி கூந்தலில் தடவினால் முடி நன்றாக வளரும்.
*1 லிட்டர் நல்லெண்ணெயில் நெல்லிக்காய்ப் பொடி, தான்றிக்காய்ப் பொடி, மருதாணி பொடி, கறிவேப்பிலைப் பொடி, கரிசலாங்கண்ணி பொடி, வெட்டிவேர், ரோஜா இதழ்கள், உலர்ந்த செம்பருத்தி பூ, சந்தனப் பொடி ஆகியவை தலா பத்து கிராம் சேர்த்து எண்ணெய்யில் போட்டு கொதிக்க வைக்கவும். இந்த கலவையை நான்கு நாட்கள் வெயிலில் வைக்க வேண்டும். சூரிய ஒளியில் பட்டு எண்ணெய்யில் இதன் சாறு இறங்கும். பின் வெள்ளைத்துணியில் அதை வடிகட்டவும். குளிக்கும் முன் இதை தலையில் தேய்த்து வந்தால் முடி கருமையாகவும், அடர்த்தியாக வளரும்.
*மருதாணி, செம்பருத்தி, கறிவேப்பிலை, ரோஜா இதழ்கள் இவற்றை நன்கு நிழலில் உலர்த்திப் பொடி செய்து வைத்துக்கொண்டு தேவைப்படும் போது காய்ச்சிய தேங்காய் எண்ணெய்யில் கலந்து ஊற விட்டு பின்பு தலைக்குத் தேய்க்கவும். இப்படி செய்தால் தலைமுடி உதிர்வது குறையும்.
*செம்பருத்தி இலை, பூ, மருதாணி இலை, முட்டையின் வெள்ளைக்கரு ஆகியவற்றை அரைத்து கலந்து தலையில் தேய்த்து அரைமணி நேரம் ஊற வைத்து குளிக்கலாம்.
 
 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Tamil Business Ideas