கோடைக்காலத்ததல் ஏற்படும் வயிற்றுப்போக்கை தடுப்பது எப்படி?

கோடைக்காலத்தில் வரும் அம்மை போன்ற நோய்கள் போல வயிற்றுப்போக்கும் ஏற்படும் இதிலிருந்து நம்மை காப்பாற்றி கொள்ள என்ன செய்ய வேண்டும் என்று பார்ப்போம்!
* குடி தண்ணீரைக் குறைந்தது 5 நிமிடங்களுக்குக் கொதிக்க வைத்து, ஆற வைத்துக் குடிக்க வேண்டும்.
*வீட்டிலிருக்கும் குடிதண்ணீர்த் தொட்டி யில் சரியான அளவில் குளோரின் கலந்து பயன்படுத்தினால் நோய்க் கிருமிகள் சேராது.
* சரியான கால இடைவெளியில் குடிதண்ணீர் தொட்டிகளை சுத்தப்படுத்த வேண்டும்.
*நன்கு வேகவைத்த உணவை உண்ண வேண்டும்.
*கோடையில் சமைத்த உணவுகள் எளிதில் கெட்டுவிடும் என்பதால், சுடச்சுடச் சாப்பிட்டுவிட வேண்டும். ஃப்ரிட்ஜில்  சேமித்துவைத்துச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
*உணவு வகைகளை ஈக்கள் மொய்க்காமலும் எறும்புகள் தொற்றாமலும், பல்லி / பூச்சிகள் கலந்துவிடாமலும் மூடி பாதுகாக்க வேண்டும்.
*குழந்தைகளுக்குப் பாட்டிலில் பால் கொடுக்கும்போது சுத்தம் பேணப்பட வேண்டும். ஒவ்வொரு முறையும் ஃபீடிங் பாட்டில், நிப்பிள், பாட்டில் மூடி ஆகிய மூன்றையும் சுத்தமாகக் கழுவி, குறைந்தது ஐந்து நிமிடங்களுக்குத் தண்ணீரில் கொதிக்கவைத்த பிறகுதான் பயன்படுத்த வேண்டும்.
*அசுத்தமான வெளியிடங்களிலும், சாலையோரக் கடைகளிலும் திறந்தவெளி உணவகங்களிலும் அடிக்கடி சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
*ஒவ்வொரு வீட்டிலும் கழிப்பறை இருக்க வேண்டியது மிக அவசியம். அதை சுத்தமாகப் பேண வேண்டியது, அதைவிட முக்கியம். மேலும் ஒவ்வொரு முறை மலம் கழித்ததும் கைகளைச் சோப்பு போட்டு நன்கு கழுவ வேண்டும்.
*வீட்டில் ஒருவருக்கு வயிற்றுப்போக்கு தீவிரமாக இருந்தால், அவரைத் தனிமைப் படுத்தி ஓய்வு கொடுக்க வேண்டும். நோய் தீவிரமடையும் போது மருத்துவமனையில் சேர்த்துச் சிகிச்சை அளிக்க வேண்டும்.
*வீட்டில் பாதிக்கப்பட்ட நோயாளியின் மலம், வாந்தி, உடைகள், அவர் பயன்படுத்திய பாத்திரங்கள், படுக்கை விரிப்புகள் போன்ற அனைத்தையும் சலவைத்தூள் போட்டுத் தொற்றை அகற்றுதல் மிக அவசியமான நோய்த்தடுப்பு முறை.
*சுகாதாரத்தைக் கடைப்பிடித்துத் தெருக்களைச் சுத்த மாக வைத்துக்கொண்டால், ஈக்கள் மொய்ப்பதைத் தடுத்துவிடலாம். இதன் மூலம் வயிற்றுப்போக்கு வருவதையும் தடுக்கலாம்.

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Tamil Business Ideas