மார்பகப் புற்றுநோய் வருவதற்கான காரணிகள் பற்றி பார்ப்போம்!

*குடும்பத்தில் ரத்த உறவுகளில் யாருக்காவது மார்பகப் புற்றுநோய் வந்திருந்தால்,உங்களுக்கும் அதே பாதிப்பு ஏற்பட 50 சதவிகிதம் அதிக வாய்ப்புள்ளது.
*ஏற்கெனவே புற்றுநோய் பாதித்திருந்தால், மீண்டும் வர வாய்ப்பு அதிகம். இவர்கள், தொடர் பரிசோதனைகளைத் தவிர்க்கக் கூடாது. மருத்துவரின் அறிவுரையுடன் வருடம் ஒருமுறை மார்பகத்தில் மாமோகிராம் பரிசோதனை செய்து கொள்வது நல்லது.
* சிறுவயதில் மருத்துவ காரணமாகத் தீவிர கதிரியக்க சிகிச்சைகளுக்கு உட்பட்டிருந்தால், வருங்காலத்தில் புற்றுநோய் ஏற்படலாம். இந்தப் பாதிப்பு ‘ஹாட்ஜ்கின்’ஸ் நோய்’ (Hodgkin’s ailment) எனக் கூறப்படுகிறது.
* 11 வயதுக்கு முன்பே பூப்படையும் பெண் குழந்தைகளுக்கு, ‘ஈஸ்ட்ரோஜென்’ ஹார்மோன் சுரப்பு அதிகமாக இருக்கும். இந்தக் குழந்தைகளுக்கு மற்றவர்களை விடவும், இரண்டு மடங்கு அதிக வாய்ப்புள்ளது.
*‘மெனோபாஸ்’, சரியான வயதில் வராமல், இயல்பைவிடத் தள்ளிப்போனாலும், மார்பகப் புற்றுநோய் ஏற்படலாம்.
*30 அல்லது 35 வயதுக்குப் பிறகு, முதல் குழந்தையைப் பெறும் பெண்களுக்கு, மார்பகப் புற்றுநோய் ஏற்படக்கூடும்.
* வாழ்நாள் முழுவதும், கர்ப்பம் அடையாத பெண்களுக்கும் மார்பகப் புற்றுநோய் வரக்கூடும்.
*இரவுப் பணியில் அதிகம் வேலைசெய்யும் பெண்களுக்கு, ‘மெலோடினின்’ ஹார்மோன் சுரப்பு குறையத்துவங்கும். இது சில வருடங்களை வரை தொடர்ந்தால், மார்பகப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம்.
*மாசு கலந்த காற்றை அதிகம் சுவாசிக்கும் பெண்களுக்கும், வாய்ப்பு அதிகம்.
* கர்ப்பத்தடை மாத்திரைகள் பயன்படுத்தியவர்கள்,பாலூட்டாத தாய்மார்கள் கவனத்துடன் இருக்க வேண்டும்.

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course