நம் அனைவருக்கும் பிடித்தமான இளநீரை அருந்துவதால் பல நன்மைகளை உடலுக்கு தருகிறது. இதை கோடை காலம், குளிர்காலம் என எல்லா காலங்களிலும் நமது உடல் உஷ்ணத்தை குறைக்க அதிகமாக உதவுகிறது. மேலும், இளநீரில் வைட்டமின்கள், கனிமங்கள், அமினோ அமிலங்கள், மின் பொருட்கள், என்சைம்கள் என ஏகப்பட்ட சக்திகளைக் கொண்டுள்ளது. இயற்கையாக கிடைக்கும் இந்த குளிர்பானத்தை வெயில் காலங்களில் நாம் அருந்துவதனால் நமக்கு ஏகப்பட்ட ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றன.

இளநீரில் வைட்டமின்-சி, அமினோ அமிலங்கள், நார்ச்சத்து, மெக்னீசியம், பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகமாக இருப்பதினால் நமக்கு வயிற்றுப்போக்கு பிரச்சனை அனைத்தையும் குணப்படுத்துகிறது.
எடையை குறைக்கும்:

மேலும், இதில் குறைந்த அளவே கொழுப்புகள் உள்ளதால் இதை தினமும் அருந்துவதன் மூலம் நமது எடையையும் குறைக்க முடியும். இதில் இருக்கும் குறைந்த கொழுப்புகளும் நல்ல கொழுப்புகளாகும். இது உங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்கிறது.
ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்:

இதில் உள்ள தேங்காய்கள் வயிற்று புண் பிரச்சனையை தீர்க்கும். பின்பு இரத்த அழுத்தம் உள்ளவர்களும் வாரத்திற்கு ஒரு இளநீரை சாப்பிடுவதன் மூலம் அவர்களின் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் கொண்டு வர முடியும். பிறகு இது கிருமிகளால் ஏற்படும் தொற்று நோய்கள் போன்ற அனைத்தையும் இதில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி தடுத்துவிடும். எனவே இதை முடிந்தவரை குழந்தைகளுக்கு வாங்கி கொடுங்கள்.
சிறுநீரக கல் பிரச்சனையை தீர்க்கும்:

பெரும்பாலும் நம் சிறுநீரகத்தில் கற்கள் இருந்தால் தினமும் நாம் அதிகப்படியான நீர் குடிப்பதன் மூலம் அதை அகற்றி விடலாம் என்பார்கள். இது நீரை விட பல மடங்கு சக்தியைக் கொண்ட இளநீரை அருந்துவதன் மூலமாக நமது சிறுநீரகத்தில் இருக்கும் கற்களை அகற்றி விடும்.
புற்றுநோயை அழிக்கும்:

நாள்தோறும் இளநீர் குடிப்பது மிகவும் உடலுக்கு ஆரோக்கியத்தை தருமென மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். மேலும், புற்றுநோயை எதிர்க்கும் தன்மை இளநீருக்கு உள்ளது. எனவே இதை அருந்துவதன் மூலமாக புற்றுநோயை உண்டாக்கும் செல்களை அழித்துவிடுகிறது. பிறகு உங்கள் முகத்தில் ஏற்படும் சுருக்கங்கள் மற்றும் இளமையில் முதிர்ச்சி தோற்றங்களை தடுத்து எப்போதும் இளமையாக வைத்துக் கொள்கிறது.
நாம் தினமும் தெருவோரங்களில் மலிவு விலையில் விற்கப்படும் இளநீரில் இத்தகைய மருத்துவ குணங்கள் உள்ளன. ஆகவே கோடை காலம் என எக்காலத்திலும் உங்களுக்கு தாகம் எடுத்தால் குளிர்பானங்களை அருந்தாமல் இளநீரை வாங்கி அருந்துங்கள்.
Puthiyathalaimurai TV Thanthi TV News18 Tamil Nadu News7 Tamil Sathiyam TV Sun News Kalaignar News News J TV Jaya Plus News Captain TV News Polimer News







