முகப்பரு மற்றும் சரும கருமையை நீக்க நெல்லிக்காயை இப்படி யூஸ் பண்ணுங்க…

 

நெல்லிக்காய் உடல் நலம் தொடர்பான அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு தரக்கூடிய சத்துக்களைக் கொண்டது. இதில் வைட்டமின் சி மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அதிகம் உள்ளது. தினமும் நெல்லிக்காய் சாப்பிட்டால் இரத்தம் சுத்தமாகும், கொலாஜென் உற்பத்தி அதிகரிக்கும் மற்றும் சருமம் இளமையாகவும், புத்துணர்ச்சியுடனும் காணப்படும்.

நெல்லிக்காயை சாப்பிட மட்டுமின்றி, அழகு பிரச்சனைகளுக்கு மற்றும் அழகை மேம்படுத்தவும் பயன்படுத்தலாம் என்பது தெரியுமா? நெல்லிக்காயில் ஏராளமான நன்மைகள் உள்ளன. அதற்கு நெல்லிக்காயை ஃபேஸ் மாஸ்க்காகவும், ஸ்கரப்பாகவும் பயன்படுத்தலாம். இதனால் முகப்பரு, வெயிலால் ஏற்பட்ட சரும கருமை பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். இப்போது சரும பிரச்சனைகளைப் போக்க நெல்லிக்காயை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்பதைக் காண்போம்.

நெல்லிக்காய் மற்றும் பப்பாளி மாஸ்க்:

நெல்லிக்காயுடன் பப்பாளி சேர்த்து மாஸ்க் போடும் போது, சருமத் துளைகளின் ஆழத்தில் உள்ள அழுக்குகளை வெளியேற்றி சரும கருமையைப் போக்கும். இந்த மாஸ்க் தயாரிப்பதற்கு ஒரு பௌலில் 2 ஸ்பூன் நெல்லிக்காய் சாறு மற்றும் 2 ஸ்பூன் பப்பாளி கூழ் எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதை 20 நிமிடம் முகத்தில் தடவி ஊற வைக்க வேண்டும். அதன் பிறகு குளிர்ந்த நீரால் முகத்தை நன்கு கழுவ வேண்டும். இப்படி ஒருநாள் விட்டு ஒருநாள் என இரண்டு வாரத்திற்கு தொடர்ந்து மேற்கொண்டால் நமது சருமத்தில் ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம்.

நெல்லிக்காய், தயிர் மற்றும் தேன் மாஸ்க்:

நெல்லிக்காயில் சருமத்தில் உள்ள கருமையைப் போக்கும் பண்புகள் உள்ளன. எனவே வெயிலில் அதிகம் பயணிப்பவர்களுக்கு இந்த மாஸ்க் ஏற்றது. இந்த மாஸ்க் தயாரிப்பதற்கு, ஒரு பௌலில் 2 ஸ்பூன் நெல்லிக்காய் பொடி, ஒரு ஸ்பூன் தயிர் மற்றும் ஒரு டீஸ்பூன் தேன் எடுத்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின் அதை 20 நிமிடம் முகத்தில் தடவி ஊற வைத்து, குளிர்ந்த நீரால் முகத்தை நன்கு கழுவ வேண்டும்.

நெல்லிக்காய், மஞ்சள் மற்றும் எலுமிச்சை மாஸ்க்:

உங்களுக்கு அடிக்கடி முகப்பருவில் இருந்து சீழ் வருமானால் இந்த மாஸ்க் மாயங்களை ஏற்படுத்தும். இந்த மாஸ்க் தயாரிப்பதற்கு, ஒரு பௌலில் 3 ஸ்பூன் நெல்லிக்காய் பொடி, ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் 2 ஸ்பூன் எலுமிச்சை சாறு ஆகியவற்றை ஒன்றாக கலந்து, 20 நிமிடம் முகத்தில் தடவி ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.

நெல்லிக்காய், சர்க்கரை மற்றும் ரோஸ் வாட்டர் ஸ்க்ரப்:

உங்கள் முகத்தில் அழுக்கு நிறைய இருந்தால் இந்த நெல்லிக்காய் ஸ்க்ரப் நல்ல மாற்றத்தைத் தரும். மேலும், இந்த ஸ்க்ரப் பிம்பிள் வருவதைத் தடுக்க உதவும். இந்த ஸ்க்ரப் தயாரிப்பதற்கு சிறிது நெல்லிக்காய் பொடியுடன், சர்க்கரை மற்றும் ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் செய்து, சிறிது நேரம் முகத்தில் தடவி மென்மையாக தேய்க்க வேண்டும். பின் முகத்தை குளிர்ந்த நீரால் நன்கு கழுவ வேண்டும்.

நெல்லிக்காய், சர்க்கரை மற்றும் எலுமிச்சை சாறு ஸ்க்ரப்:

முகத்தில் உள்ள இறந்த செல்களை நீக்க இந்த நெல்லிக்காய், சர்க்கரை மற்றும் எலுமிச்சை சாறு ஸ்க்ரப் உதவும். அதற்கு ஒரு டேபிள் ஸ்பூன் நெல்லிக்காய் பொடியுடன், அரை டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் சிறிது சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து, சிறிது நேரம் முகத்தில் தடவி மென்மையாக தேய்க்க வேண்டும். பின் குளிர்ந்த நீரால் முகத்தை நன்கு கழுவ வேண்டும். இதனால் முகத்தில் உள்ள இறந்த செல்கள் நீக்கப்பட்டு முகம் பளிச்சென்று மாறும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course