பெண்கள் முகத்தைப் பொலிவுடன் வைத்துக்கொள்ள பல செயற்கையான அழகுச்சாதனப் பொருட்களைப் பயன்படுத்துகிறார்கள். அழகு சாதன பொருட்கள் விலையும் அதிகம் அதனால் பக்கவிளைவுகள் ஏற்படும். நாளடைவில் பிரச்சினைகள் தீவிரமடையும் ஒழிய நிவாரணம் பெரும்பாலும் தருவதில்லை.இதனால் பல பிரச்சனைகள் உண்டாகுகின்றது. எனவே செயற்கையான அழகுச்சாதனப் பொருட்களைத் தவிர்த்து, இயற்கை நமக்களித்தப் பொருட்களை வைத்து உங்கள் சருமத்தை மேலும் அழகாக்கிக் கொள்வதற்கான வழிமுறைகள் பற்றி இங்கு காண்போம்.

* சுற்றுச்சூழல் மாசுக்களால் முகம் பாதிக்கும் என்பதால் சிறிய முயற்சி சருமத்தை பாதுகாக்க உதவுகிறது.
எப்போதும் பயணங்கள் மேற்கொண்ட பிறகு களைப்புடன் வீடு திரும்புபவர்களும், பயணத்திற்கு தயாராக இருப்பவர்களும் கடலை மாவை தண்ணீரில் நன்றாக குழைத்து முகத்தில் பூசி, அவை நன்றாக உலர்ந்த பின்பு குளிர்ந்த நீரில் முகம் கழுவினால் சருமம் பளிச்சென்று இருக்கும்.
*கடலை மாவுடன் வெள்ளரிக்காய் சாறைக் குழைத்து முகத்தில் தடவி, சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவினால் முகம் பொலிவு பெறும்.

* கோடைக்காலத்தில் சருமத்தில் ஏற்படும் வறட்சியைப் போக்க கடலை மாவை பயன்படுத்தலாம். கடலை மாவுடன் காய்ச்சிய பாலை குழைத்து முகத்தில் பூசி, நன்கு உலர்ந்ததும் குளிர்ந்த நீரில் கழுவினால் முகம் பிரகாசமாக இருக்கும்.
* மேலும், முட்டையின் வெள்ளைக் கருவுடன் சிறிது தேன், எலுமிச்சைச்சாறு கலந்து முகத்தில் தடவி வந்தால் முகச்சோர்வு நீங்கிவிடும்.முகச்சுருக்கங்கள் நீங்கும்.
*முல்தானிமெட்டியை தண்ணீரில் நன்றாக குழைத்து முகத்தில் தடவி வர, முகம் புத்துணர்வு பெறும். முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்கும்.
* சிவப்பு சந்தனம் என்ற பெயரில் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் அதனை தண்ணீரில் கலந்து முகத்தில் பூசி வந்தால் முகம் பொலிவு பெறும்.
* சருமம் எண்ணெய் பிசுபிசுப்புத்தன்மையுடன் இருந்தால் கடலை மாவுடன் தயிர், எலுமிச்சைச் சாறு கலந்து முகத்தில் பூச வேண்டும். சிறிது நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவினால் எண்ணெய் பிசுபிசுப்பு நீங்கி முகம் பொலிவு பெறும்.

* வெயில் காலத்தில் சருமத்தில் ஏற்படும் வறட்சியைப் போக்க தயிருடன் மஞ்சள் கலந்து முகத்தில் பூசி, பத்து நிமிடங்கள் கழித்து முகத்தைக் கழுவ வேண்டும்.
* கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து சருமத்தைப் பாதுகாக்க கடலை மாவுடன் ரோஸ்வாட்டர், பால் சேர்த்து குழைத்து முகத்தில் பூசி, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
* அதேபோல் கடலை மாவுடன் சிறிது எலுமிச்சைச்சாறு, பால், மஞ்சள் தூள் கலந்து முகத்தில் பூசி, மிதமான சுடுநீரில் கழுவி வந்தால் முகம் பளபளப்பாகும்.
அத்துணையும் எளிமையான வழிமுறைகள் இதனை தினம் ஒன்றாக கடைப்பிடித்தாலே போதும் .
Puthiyathalaimurai TV Thanthi TV News18 Tamil Nadu News7 Tamil Sathiyam TV Sun News Kalaignar News News J TV Jaya Plus News Captain TV News Polimer News