நீங்கள் நினைத்த இலக்கை அடைய எப்படி உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும்….

ஆரம்பகட்டத்தில்  மிதமான பயிற்சிகளை குறைவான எண்ணிக்கையில் செய்யத் தொடங்குங்கள்,பின்னர்  போகப்போக கடினமான பயிற்சிகளை, எண்ணிக்கை அதிகரித்து செய்வதன் மூலம் ஒருவர் அடைய நினைத்த இலக்கை அடையலாம்.ஒவ்வொரு மனிதனுக்கும் முதுகு வலி, இடுப்பு வலி, முட்டிவலி என பல்வேறு விதமான பிரச்சனைகள் இருக்கும். எனவே ஒவ்வொருவரின் வாழ்க்கை வேலையிலும் நடவடிக்கைகள் மாறுபடும் என்பதால், மற்றவர்களோடு ஒப்பிட்டு, அதிகப்படியான எண்ணிக்கைகளில் பயிற்சிகள் செய்வதை தவிர்ப்பதற்காக முதலில் வாடிக்கையாளர்களிடம் பேசி புரிய வைப்பது பயிற்சியாளர்களின் கடமை.

இதனால் அதிகப்படியான ஆர்வத்தில் அவர்கள்  பயிற்சிகளைச் மேற்கொள்வதால் தசைகளிலும், எலும்புகளிலும் கடுமையான காயங்கள் மற்றும் உடல்வலிகள் வரவழைத்துக் கொள்வதை தவிர்க்கலாம். ஆரம்பகட்டத்தில் மிதமான பயிற்சிகளை குறைவான எண்ணிக்கையில் செய்யத் தொடங்கி, போகப்போக கடினமான பயிற்சிகளை, எண்ணிக்கை அதிகரித்து செய்வதன் மூலம் ஒருவர் அடைய நினைத்த இலக்கை அடையலாம்.

நாம் எல்லோரும் எடுத்தவுடனே உடற்பயிற்சி செய்ய ஆரம்பிக்கிறோம் ஆனால்  அப்படி உடனே உடற்பயிற்சியை செய்யக்கூடாது. உடற்பயிற்சிகள் செய்வதற்கு முன் “வார்ம் அப்” பயிற்சிகள் செய்வது மிகவும் அவசியம். எனென்றால் பயிற்சிகளுக்குப்பின் தசைகளில் ஏற்படும் வலியின் தீவிரத்தைக் குறைக்க உதவியாக இருக்கும். “வார்ம் அப்” செய்யும்போது உடல் வெப்பம் மற்றும் இரத்த ஓட்டம் அதிகரிக்கச்செய்வதால் தசைகளுக்கு தேவைப்படும் ஆக்ஸிஜன் கிடைக்கும்

ஒரு இலக்கோடு உடற்பயிற்சி நிலையத்தில் சேருங்கள். இதற்கான SMART ஃபார்முலா ஒன்று இருக்கிறது. S – Specific கலோரி எத்தனை எரிக்க வேண்டும் என்று ஒரு இலக்கு நிர்ணயித்துக் கொண்டு அதற்கேற்ப பயிற்சிகள் செய்ய ஆரம்பிக்கலாம். M – Measurable   உங்கள் கருவிகள் நீங்கள் எரிக்கும் கலோரிகளை கண்காணிக்கும், எனவே நீங்கள் அடைய வேண்டிய லட்சிய இலக்கை தெளிவாகத் தெரிந்து கொள்ள முடியும்.

Attainable  ஒரு வாரப் பயிற்சிக்குப்பின் ஆயிரம் கலோரிகள் எரித்திருப்பீர்களேயானால், அதிலிருந்து சிறிதளவே அதிகரிக்கச் செய்கிறது, அடுத்த வாரம் 1250 கலோரிகள் என எளிதில் அடையக்கூடிய இலக்காக நிர்ணயிக்க வேண்டும். இதனால் ஏதாவது ஒரு பயிற்சியை அதிகரிக்கச் செய்தாலே அது சாத்தியமாகிவிடும். Relevant – “உடற்பயிற்சி” முழுவதும்  எடை இழப்போடு தொடர்புடையது என்பதால் எந்த அளவிற்கு உடற்பயிற்சி செய்கிறீர்களோ அந்த அளவிற்கு உடல் எடையை குறைக்க முடியும்.

Time -Bound நேர அளவை குறிப்பிட்டபடி வகுத்துக் கொள்ள வேண்டும். லட்சியத்தை அடைய வேண்டும் என்பதற்காக அதிக நேரம் ஒரு நாள் செய்துவிட்டு, அடுத்த நாள் உடற்பயிற்சியை செய்யாமலே இருப்பது என்பது தவறானது. சீரான நேரத்தில் “உடற்ப்பயிற்சி” செய்வதால், இந்த வாரம் உங்கள் லட்சியத்தை அடைய இயலாவிட்டாலும், அடுத்த வாரம் முடித்து விடலாம். அல்லது இலக்கை மாற்றியமைத்துக் கொள்ளலாம்.

நம் அளவுக்கதிகமான எடையை தூக்கிகொண்டு பயிற்சி செய்வதும் தவறு. பயிற்சியாளரின் அறிவுரை இல்லாமல் தாங்களாகவே கண்ணில் தெரியும் உபகரணங்களை தூக்கி பயிற்சி செய்ய ஆரம்பித்து கொள்வார்கள் . இதனால் திசுக்கள் பாதிப்படைந்து விரைவில் உடற்பயிற்சி செய்வதையே நிறுத்தி விடுகிறார்கள் . பளு தூக்கி செய்யும் போது மூச்சு நுட்பவித்தைகளை  பயிற்சியாளர் கற்றுக்கொடுப்பார். இல்லையென்றால் “ஹெர்னியா” என்கிற ஆண்களுக்கு குடல் இறங்குவது, பெண்களுக்கு கர்ப்பப்பை இறங்குவது போன்ற உள்ளுறுப்புகள் பாதிப்படைய வாய்ப்புண்டு.  பளு தூக்குவதைப் பொருத்தமட்டில் ஒருவருக்கு, இவ்வளவு எடை, இத்தனை முறை செய்வது என   குறிப்பிட்ட விதிகள் இருக்கிறது. அவற்றை நிச்சயமாக கடைபிடிக்க வேண்டும். 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course