கொரோனா டெஸ்ட்ல நெகட்டிவ்னு வருது ; ஆனா கொரோனா அறிகுறி இருக்கு என்னனு தெரிஞ்சுக்கணுமா இதை பாருங்கள்  

உலகில் கொரோனா என்ற நோய் தொற்று பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வரும் நிலையில் கொரோனா வைரஸ் பொதுவான அறிகுறிகள் இருந்தாலே கொரோனா பரிசோதனைகள் செய்ய வேண்டும்.இதையடுத்து பரிசோதனையில் நெகட்டிவ் வருவதற்கான வாய்ப்புகள் ஏன் வருகிறது என்பதை பார்க்கலாம்.கொரோனா அறிகுறிகளாக காய்ச்சல், உடல் வலி, இருமல், கடுமையான சோர்வு, வயிற்றுப்போக்கு என எல்லாமே சொல்லப்படுகிறது.இந்த அறிகுறிகள் இருந்தாலே கொரோனா பரிசோதனைகள் கண்டிப்பாக செய்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. ஆனால் சில சமயங்களில் கொரோனா தொற்று இருந்தாலும் அவர்களுக்கு நெகட்டிவ் என்ற முடிவுக்கு வருகிறது. இதனால் வழக்கத்தை காட்டிலும் அதிகமான அறிகுறிகள் மோசமாகும் போது தான் கொரோனா கண்டறியப்படுகிறது.

​கொரோனா வழக்குகள்

நாடு முழுவதும் கொரோனா நோயாளிகள் அதிகரித்து வரும் நிலையில்  சமீப நாட்களாக தினசரி கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை மூன்று இலட்சத்தை தாண்டியுள்ளது. அறிகுறிகள் இருந்த போதிலும் சிலர் கொரோனாவை கண்டறிதல் தாமதத்தை எதிர்கொள்கிறார்கள். கொரோனா அறிகுறிகள் இருந்து பரிசோதனை செய்யும் போது அது ஃபால்ஸ் பாஸிட்டிவ் அல்லது ஃபால்ஸ் நெகட்டிவ் போன்றவற்றை மருத்துவர் சொல்ல நீங்கள் கேட்டிருக்கலாம்.

அப்படியெனில் உங்களுக்கு கொரோனா வைரஸ் திரிபு அடைந்ததால் அது வைரஸ் பரிசோதனையில் தெரியாமல் போய்விடுகிறதோ என்ற சந்தேகம்  இருக்கலாம்.நீங்கள் அதற்கு முன்பு கொரோனா பரிசோதனைகள் குறித்து அறியலாம்.

​கொரோனா பரவல் அச்சம்

மேலும் மேலும் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  உயரும் என்று ஆய்வு கணிப்பில் எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனாவை கண்டறிவதில் தாமதம் ஏற்படுவதாலும் நோயறிதலும் தவறான எதிர்மறைகள் இருப்பதாலும் தான் இந்த இரண்டாவது அலைகளின் போது நோயை நிர்வகிப்பதில் அதிக பிரச்சனையை எதிர்கொள்கிறார்கள்.

 வேகமாக பலருக்கும் தொற்று பரவிய காரணமும் இதுவே. கொரோனா பரிசோதனைகளில் ஆர்டி- பி.சி.ஆர் சோதனை முக்கியமானதாக கருதப்படுகிறது.என்ன மாதிரியான முடிவுகள் இந்த சோதனையின் போது கிடைக்கும் என்று பார்க்கலாம்.

​ஆர்டி. -பி.சி ஆர் பரிசோதனை என்றால் என்ன?


​ஆர்டி. -பி.சிஆர் பரிசோதனையின் போது சளி பரிசோதனை,மூக்கு அல்லது தொண்டையில் இருந்து சளி மாதிரிக்கு எடுக்கப்படும். கொரோனா தொற்றை  இந்த ஆர்டி மற்றும் பிசிஆர் பரிசோதனை மூலம்  இருப்பதை உறுதி செய்ய முடியும். இந்த பரிசோதனையில் ஒரு நீண்ட குச்சி போன்ற பொருளை கொண்டு சளி மாதிரி திரவம் உள்ள குழாயில் கரைக்கப்படுகிறது.

பஞ்சு மூலம் எடுக்கப்பட்ட சளியில் உள்ள வைரஸ் இப்போது  அந்த குழாயில் உயிர்ப்பாக காணலாம். இதை கொண்டு ஆய்வுக்காக பரிசோதனை கூடத்துக்கு அனுப்பப்படும். ஆனால் நிபுணர்கள் இந்த பரிசோதனை முறையை  கொரோனாவை கண்டறிய உதவும் சோதனை என்று உறுதியாக நம்புகிறார்கள். ஆனால் சில சமயங்களில் இது தவறான முடிவுகளையும் காட்டுகிறது. இதுதான் ஃபால்ஸ் நெகட்டிவ் என்று காட்டுகிறது.

 

கொரோனா அறிகுறிகள் இருந்தும் நெகட்டிவ் வர காரணம் என்ன?

 

 கொரோனா அறிகுறிகளாக காய்ச்சல், உடல் வலி, சளி, இருமல் போன்ற பிரச்சனைகள் வருவதாக சொல்லப்படுகிறது. ஆனால் மருத்துவர்கள்  பரிசோதனைக்கு பிறகு நெகட்டிவ் முடிவு வருவதற்கு முக்கிய காரணங்களாக சொல்வது இதுதான். பரிசோதனையின் போது சளி மாதிரி எடுக்கும் நடைமுறையில் ஏற்படும் சில தவறுகள்.

தவறான முறையில் சளி மாதிரி எடுப்பதால் சளியை சேகரிக்கும் குழாயில் திரவ அளவுகள் குறைவாக இருப்பது, முறையற்ற வகையில் சளி மாதிரிகள் பரிசோதனைக் கூடங்களுக்கு எடுத்து செல்வது போன்றவற்றால் கூட இந்த தவறுகள் உண்டாகலாம். ஆரம்ப கட்ட அறிகுறிகளின் போது வைரஸ் அளவு மிக மிக குறைவாக இருக்கும். அதனால் பரிசோதனையில் அறிகுறிகள் இருந்தாலும்  நெகட்டிவ் வருவதற்கான வாய்ப்புண்டு.

கொரோனா பரிசோதனையில் அதிக அளவு ஊழியர்கள்  இடம் பெறுகிறார்கள். சில சமயங்களில் பயிற்சி பெறாத ஊழியர்களை பயன்படுத்தும் போது தவறான முடிவுகள் வருவதற்கான வாய்ப்புண்டு. இறுதியாக ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு பரிசோதனை மாதிரிகள் எடுத்து செல்லும் போது அதன் கட்டமைப்பு சரியாக இருக்க வேண்டும்.வைரஸ் வெப்ப நிலையில் வைக்கப்படும் போது அதன் திறனை இழந்துவிடும்.அப்போது நெகட்டிவ் முடிவு வருவதற்கான வாய்ப்புகளை உண்டாக்குகிறது.

​கொரோனா பரிசோதனை துல்லியமாக கண்டறிவது எப்படி?

வைரஸ் ஆரம்ப கட்டத்தில் அறிகுறிகள் தெரியும் போது தாக்குதல் மிக லேசாக இருக்கும் போது பரிசோதனை செய்யும் போது ஃபால்ஸ் நெகட்டிவ் முடிவு பெறுவீர்கள். அதனால் அறிகுறிகள் இருந்து கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் வந்தால் மீண்டும் 5 நாட்களுக்கு பிறகு மீண்டும் பரிசோதனை செய்தால் அறிய முடியும்.

நெகட்டிவ் மீண்டும் பரிசோதனையின் போது வந்தால் பிறகு சிடி ஸ்கேன் மூலம் அறிகுறிகளை கண்டுபிடிக்கலாம். அரிதாக High Resolution CT Scan செய்யப்படும்.இருமல், மூச்சுத்திணறல், ஆக்ஸிஜன் அளவு தொடர்ந்து  நோயாளிகளுக்கு  குறைந்தால் இந்த பரிசோதனை மூலம் பாதிப்பின் தீவிரத்தை கண்டுபிடிக்கலாம். குறைந்த வைரஸ் உடலில்  இருக்கும் போது வைரஸ் துகள்கள் இல்லாவிட்டால் எதிர்மறையான முடிவுகளை தரக்கூடும். அதனால் தொற்று இருந்தாலும் வைரஸ் அறிகுறி தொடங்கிய பிறகு குறிப்பிட்ட இடைவெளி இருக்கட்டும். 2 முதல் 7 நாட்கள் இடைப்பட்ட காலத்தில் பரிசோதனை எடுக்கலாம். இன்னும் துல்லியமான முடிவுகளுக்கு சுயமாக தனிமைப்படுத்தி 3 முதல் 4 நாட்களுக்கு பிறகு பரிசோதிப்பது நல்லது.

ஃபால்ஸ் பாஸிட்டிவ் என்பது என்ன?

 

ஃபால்ஸ் பாஸிட்டிவ் என்றால் கொரோனா தொற்று இல்லாதவருக்கு தொற்று இருப்பதாக வருவது. கொரோனா பாதிப்புக்கு பிறகு தொற்று இருப்பதாக பரிசோதனை முடிவு வருவதற்கு வாய்ப்புண்டு. காரணம் உடலில் உயிர்ப்பில்லாத கொரோனா வைரஸ் இருக்கும். குணமடைந்து ஒரு மாதத்துக்குள் பரிசோதனை செய்தல் இந்த முடிவுகள் வருவதற்கான வாய்ப்புண்டு.

கொரோனா உருமாற்றம்- ஆர் டி – பி.சி.ஆர் பரிசோதனையில் தெரிய வருமா?

மகாராஷ்டிரா மாநிலத்தின் சுகாதாரத்துறை:இந்தியாவில் இரட்டை திரிபு அடைந்த கொரோனா தாக்கம் அதிகரித்துள்ளது. வேகமான பரவலுக்கு காரணமும் இதுதான் என்று கூறுகிறது. உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு அணுக்களால் இந்த வைரஸை கண்டறிய முடியவதில்லை. அதனால் அவை வேகமாக பரவுகிறது. வேகமாக இந்த வைரஸ் திரிபு அடைவதால் பரிசோதனைகளை அதற்கேற்றவாறு மாற்றவேண்டும் என்று பரிசோதனை உபகரணங்களில் சில திருத்தங்களை அரசு செய்துள்ளது.


அதே நேரம் இந்த பரிசோதனையில் திரிபு வைரஸ்  தென்படாமலும் போகலாம். அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறையான எஃப் டிஏ வானது வைரஸ் குறித்து எந்த மரபணூ பகுதியை பரிசோதனை மூலம் கண்டறிந்து முடிவை கண்டறிகிறோமோ அந்த பகுதியில் வைரஸ் திரிபு அடைந்தால் அது பரிசோதனைகளில் தென்படாது. அப்போது ஃபால்ஸ் நெகட்டிவ் வரும் என்று சொல்லப்படுகிறது. செப்டெம்பர் மாதம் இது குறித்து  நடந்த ஆராய்ச்சியில் வைரஸ் திரிபு அடைந்தால் பரிசோதனை முடிவுகள் தவறாக வரக்கூடும் என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. அதே நேரம் இந்த ஆர்டி -பி.சி.ஆர் பரிசோதனை வைரஸ் திரிபு அடைந்தாலும் சோதனையில் கண்டறிய முடியும் என்று இந்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top