“பத்மா” என்றால் தாமரை என்று பொருள் விளக்கம். இந்த ஆசனத்தை மேற்கொள்ளும்போது தாமரை பூ போல தோற்றம் கிடைக்கும் ஆகவே இந்த பெயர் பிராணாயாமம், ஜபம், தியானம் செய்வதற்கு மிகவும் உயரந்த ஆசனம்.

பத்மாசனம்

செய்முறை
நீங்கள் பயிற்சியை செய்யும் முன் தரையில் நேராக அமர்ந்து இரண்டு கால்களை நேராக முதலில் நீட்டிகொளவும் பின்பு பத்மாசனத்தை மேற்கொள்ளவும். இடது தொடையின் மேல் வலது காலைமடக்கி பின்பு வலது தொடையின் மேல் இடது காலைமடக்கி வைத்து படத்தில் உள்ளவாறு வைத்துக்கொள்ள வேண்டும். முதலில் எந்த கால்களை வேண்டுமானாலும் மடக்கிவைக்கலாம். “பத்மாசனத்தில்” அமர்ந்த பின்பு உடல் நேராகவும் பார்வை நேராகவும் அமைந்திருக்கவேண்டும். இறுக்கி பிடித்தவாறு உடலை வைக்க கூடாது. மேல்நோக்கி உள்ளங்கையை வைத்திருக்க வேன்டும் ஆள்காட்டி விரல் கட்டை விரலை தொட்டுக் கொண்டிருக்க வேண்டும்(சின்முத்ரா). நேராக அமர்ந்து சுவாச மூச்சை பொறுமையாக விடவேண்டும்.

நேர அளவு
1-5 நிமிடங்கள் வரை இந்த ஆசனத்தை முதலில் செய்யலாம். பழகிய பின் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் செய்யலாம்.
பயன்கள்
இரத்த ஓட்டம் வயிற்றில் சரிபடுத்தப்பட்டு ஞாபகசக்தி அதிகரிக்கும் . முதுகுத்தண்டை பலப்படுத்தும். தொப்பை குறையும். பிராணாயாமம், ஜபம், தியானம் செய்வதற்கு மிகவும் உயரந்த ஆசனம். நரம்புகளுக்கு நல்லது. மனோசக்தி கூடுகிறது.
Puthiyathalaimurai TV Thanthi TV News18 Tamil Nadu News7 Tamil Sathiyam TV Sun News Kalaignar News News J TV Jaya Plus News Captain TV News Polimer News







