பொடுகுத் தொல்லை நீங்க வீட்டிலே தயாரிக்கும் ஹேர் மாஸ்க்…

பொடுகுத் தொல்லை என்பது கடன் தொல்லையை விட பெரும் பாடு. தலையில் அரிப்பும் , வெள்ளை செதில்கள் பறப்பதும், முடி உதிர்வதும் தீராத தலைவலி. பொடுகு நீங்க விற்கும் ஷாம்புகள் அனைத்தும் தற்காலிகமானவை மேலும் பக்க விளைவுகள் தரும். 

 

 

எளிமையும் மலிவும் ஆன வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு சில கலவைகளை கூந்தல் பராமரிப்பில் பயன்படுத்தும் போது பக்க விளைவுகள் இல்லாத அதேசமயம் பொடுகுத் தொல்லை நீங்குவதோடு , கூந்தல் வளர்ச்சிக்கும்  உதவுகிறது. 

எலுமிச்சை , தயிர் , தேன் கலவை:

எலுமிச்சை சாறு உடன் தயிர் தேனை கலந்து , மயிர் கால்களில் படும்படி தடவவும் . முப்பது நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் முடியை அலசவும். எலுமிச்சையில் உள்ள அமிலமானது scalp ல் உள்ள pH சீராக்குகிறது. தயிரும் தேனும் கூந்தல் வளர்ச்சிக்கு உதவுகிறது.

செம்பருத்தி இலை, வெந்தயம்:

ஒரு ஸ்பூன் வெந்தயத்தை முதல் நாளே ஊற வைத்து ,  ஊறிய வெந்தயத்துடன் செம்பருத்தி இலைகளை அரைத்து இதனை தலையில் தடவி குளிக்கலாம். குளிர்ச்சி சேராத சைனஸ் , ஆஸ்துமா தொல்லை உள்ளவர்கள் தவிர்த்தல் நல்லது.

தேங்காய் எண்ணெய் மசாஜ்:

லேசாக சூடாக்கிய தேங்காய் எண்ணெயை மயிர்க்கால்களில் படும்படி நன்றாக தடவவும். முப்பது நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் தலைக்கு குளிக்கலாம். தலைமுடியில் எண்ணெய் இருப்பதை விரும்பாதவர் ஷாம்பூ போட்டு அலசவும்.

 

 

தயிர் முட்டை கலவை:

தயிருடன் எலுமிச்சை சாறு மற்றும் முட்டை வெள்ளை கருவை சேர்த்து தலையில் தடவி ஊறவிடவும். முட்டை மற்றும் தயிரிலிருந்து கூந்தலுக்கு தேவையான சத்துக்கள் கிடைப்பதால் கூந்தல் வளர்ச்சிக்கு உதவும். எலுமிச்சை மூலம் எண்ணெய் சுரப்பிகளின் pH சீராக்குகிறது. தலையில் உள்ள பூஞ்சைகளை அழிக்கிறது. முட்டை தயிர் சேர்ப்பதால் நன்கு ஷாம்பு போட்டு கூந்தலை அலசவும்.

 தேங்காய் பால்:

தேங்காய் பாலை தலைக்கு தேய்த்து சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் சீயக்காய் போட்டு குளித்தால் நலம்.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course