உங்கள் சிறுநீரின் நிறத்தை வைத்து உங்கள் நோயைக் கண்டறியலாம்?

 

உடல் இயக்கத்தில் இருந்து வெளியேறும் கழிவுகள் சிறுநீர் வழியாக வெளியேறும்.சிறுநீரகம் மட்டும் அல்லாமல் உடலில் ஏதும் பாதிப்பு என்றால் சிறுநீரின் நிறம், மணம் , சிறுநீர் கழிக்கும் நேர இடைவெளி , சிறுநீரின் அளவு என எந்தவிதத்திலாவது அறிகுறிகளை காட்டும்.

 

வெண்மை நிறத்தில் சிறுநீர்:

 

சிறுநீர் மிகவும் வெண்மையாக, தெளிவாக இருந்தால், நாம் அதிக அளவில் தண்ணீர் குடிக்கிறோம் என்று அர்த்தம். அதிக அளவில் நீர் சேரும்போது, உடலில் தண்ணீர்-சோடியம் சமநிலையின்மை ஏற்படும்.ஏனெனில் சிறுநீர் வழியே சோடியம் வெளியேறும் போது உடலில் தாது உப்புக்களின் சமநிலை பாதிக்கப்படும்.

 

அடர் மஞ்சள் நிறத்தில் சிறுநீர்

 

சிறுநீர் வெளிர் மஞ்சள் நிறத்தில் இருந்தால், `உடலில் போதிய அளவுக்கு நீர் உள்ளது, நலமாக இருக்கிறோம்’ என்று பொருள். ஆனால், சிறுநீர் அடர்த்தியாகவும் , அடர் மஞ்சள் நிறத்தில் இருந்தால், போதிய அளவுக்கு நீர் எடுத்துக்கொள்ளவில்லை என்று பொருள். தாகம் எடுக்கும்போதெல்லாம் தண்ணீர் குடிப்பதும், சிறுநீரை அதிக நேரம் அடக்கிவைக்காமல் வெளியேற்றுவதுமே இந்தப் பிரச்னைக்குத் தீர்வு.

 

 

உடலில் உள்ள நச்சுப்பொருட்கள் சிறுநீர் வழியாகத்தான் வெளியேற்றுகிறது.சிறுநீரை அதிக நேரம் அடக்கி வைத்திருந்தால்,நச்சுகள் வெளியேறாமல், அதன் அடர்த்தி அதிகமாகும் போது சிறுநீரகத்திலே படிந்து விடும்.

 

பழுப்பு நிறத்தில் சிறுநீர்:

 

சிறுநீர் பழுப்பு நிறத்தில் இருந்தால், அது நீரிழப்பு (Dehydration) பிரச்னை இருப்பதைக் குறிக்கிறது. கல்லீரலில் ஏதேனும் பாதிப்பு இருந்தாலும், சிறுநீர் பழுப்பு நிறத்தில் வெளியேறும்.

 

சிவப்பு நிறத்தில் சிறுநீர்:

 

சிறுநீர் இளஞ்சிவப்பு அல்லது சிவப்பு நிறத்தில் வெளியேறினால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சில வேளைகளில் நாம் சாப்பிட்ட உணவு , மாத்திரைகள் இதற்குக் காரணமாக இருக்கலாம். பீட்ரூட், கேரட் மாதிரியான உணவுகளை அதிகமாகச் சாப்பிடும்போது சிறுநீர் சிவப்பாக வெளியேறும். ஆனால், இந்த மாதிரியான உணவுகளைச் சாப்பிடாத நேரத்திலும் சிறுநீர் சிவப்பாக வெளியேறினால், சிறுநீரில் ரத்தம் இருக்க வாய்ப்பு உண்டு. சிறுநீரில் கல், சிறுநீரகப் பாதைத் தொற்று, சிறுநீரகப் புற்றுநோய் போன்றவை இருந்தால் சிறுநீரில் ரத்தம் கலந்து வெளியேறும்.

 

 

நீலம் அல்லது பச்சை நிறத்தில் சிறுநீர்:


தோல் அல்லது நரம்பு மண்டலத்தை பாதிக்கக்கூடிய போர்ஃபைரியா (Porphyria) நோய் இருந்தால், சிறுநீர்  நீலம் அல்லது பச்சை நிறத்தில் வெளியேறும். 

 

ஆரஞ்சு நிறத்தில் சிறுநீர்:

 

சரியாகத் தண்ணீர் குடிப்பதில்லை என்று அர்த்தம். இது கல்லீரல் மற்றும் பித்த நாள பிரச்னைகளின் அறிகுறியாகவும் இருக்கலாம். மஞ்சள் காமாலை இருந்தாலும் இந்த நிறத்தில் தான் சிறுநீர் இருக்கும்.

 

நோய்கள் குணமாக எடுத்துக் கொள்ளும் மாத்திரைகள் சிறுநீரகத்தின் நிறத்திற்கு காரணம் இல்லை என்றால் உடனடியாக மருத்துவரை அணுகுங்கள்!

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top