பான் – ஆதார் கார்டை இணைக்க மார்ச் 31-ம் தேதி கடைசி நாள் என்றும், இல்லை என்றால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பயனர்கள் இன்று ஒரே நேரத்தில் வருமான வரித்துறையின் வலைத்தளப்பகுதியை அணுகியதால் அந்த பக்கம் முடங்கி போனது.

இதனை தொடர்ந்து பயனர்கள் கால நீட்டிப்பு செய்ய வேண்டும் என சமூக வலைத்தள பக்கத்தில் செய்திகளை வெளியிட்டனர். இந்நிலையில், பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் ஜூன் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பான் – ஆதார் எண் இணைப்புக்கான அவகாசத்தை நீட்டித்துள்ளதாக வருமான வரித்துறை அறிவித்துள்ளது.







