புதுச்சேரியில் கொலை செய்யப்பட்டு இறந்த நண்பனின் கல்லறையில் அவரது குழந்தை கையில் பட்டாக்கத்தி கொடுத்து எதிரிகளை பழி தீர்க்க சொல்லி பாடல் பாடி சபதம் எடுத்த வீடியோ வைரலாகி வருகிறது.
புதுச்சேரி திப்புராயபேட்டையை சேர்ந்த தீப்லான் என்பவர் கடந்த ஆண்டு முன்விரோதம் காரணமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் தவீத், கௌசிகபாலசுப்பிரமணி, தணிகையரசு உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இதில் தற்போது சிலர் பிணையில் வெளி வந்துள்ளனர்.
இந்நிலையில் தீப்லானின் பிறந்த நாளன்று அவரது கல்லறைக்கு நண்பர்களான ஆட்டோ மணி மற்றும் அவரது கூட்டாளிகள் சென்றுள்ளனர். அப்போது தீப்லானின் குழந்தை கையில் பட்டாக்கத்தி கொடுத்து கேக் வெட்டி கொலை செய்தவர்களை பழிவாங்க பாடல் பாடி சபதம் எடுத்தனர்.
Puthiyathalaimurai TV Thanthi TV News18 Tamil Nadu News7 Tamil Sathiyam TV Sun News Kalaignar News News J TV Jaya Plus News Captain TV News Polimer News