கல்லால் அடித்து கொல்லப்பட்ட வாலிபர்:சடலத்துடன் உறவினர்கள் சாலை மறியல்

திண்டுக்கல் லயன் தெருவை சேர்ந்த மனோஜ் (30 ) என்பவர் சில நாட்களுக்கு முன்பு செல்லாண்டியம்மன் கோவில் தெருவில் நின்று தனது நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த போது மது போதையில் அங்கு வந்த சிலர் மனோஜிடம் தகராறில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த அவர்கள் மனோஜை கல்லால் தாக்கி உள்ளனர் .

இதில் படுகாயமடைந்த மனோஜ் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.பிறகு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் , கல்லறை தோட்டம் அருகே அந்த மனோஜின் சவப்பெட்டியை சாலையில் வைத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்யும் படியும் கோஷமிட்டனர். 

இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸ் துணை சூப்பிரண்டு மணிமாறன் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து, மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, மனோஜ் தாக்கப்பட்ட அன்றே

செய்யப்பட்டு 6 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய 4 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது .என்று தெளிவாக கூறியதன் பேரில்  மனோஜின் உறவினர்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top