சிஎஸ்கேவா பஞ்சாப் கிங்ஸ் ஹா இன்று வெல்லப்போகும் அணி யார் ?

 

இன்று நடைபெற இருக்கும் ஐபிஎல் தொடரின் 8வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ்-சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோத உள்ளன. இதற்கு முந்தைய ஆட்டத்தில் சிஎஸ்கே பந்து வீச்சு சுத்தமாக எடுபடாத நிலையில் இருந்தது. இதுகுறித்து பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக கூடுதல் கவனம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிஎஸ்கே 2-வது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இரு அணிகளும் 24 முறை நேருக்குநேர் மோதியதில் சிஎஸ்கே 15 முறை வென்றது குறிப்பிடத்தக்கது. 

 

பஞ்சாப் அதிரடி ஆட்டத்தால் முதல் போட்டியில் அபார வெற்றி பெற்ற உற்சாகத்துடன் இன்று 2வது ஆட்டத்தில் களமிறங்க இருக்கிறது. பொறுப்பான கேப்டனாக  ராகுல், யுனிவர்சல் பாஸ் கிறிஸ் கேல், அதிரடி தீபக்  ஹூடா, வேகம் முகமது ஷமி, இளம் வீரர் அர்ஷ்தீப்  சிங், தமிழக வீரர் ஷாருக்கான் ஆகியோர் நம்பிக்கை கொடுக்கும் வகையில் ஆட்டத்தை ஆடி வருகின்றனர்.  நிகோலஸ் பூரன், முருகன் அஷ்வின், ைஜ ரிச்சர்ட்சன்,  ரிலே மெர்டித் ஆகியோரும் இருப்பதால் பஞ்சாப் வலுவான அணியாக திகழுகிறது. கூடவே டேவிட் மாலன், கிறிஸ் ஜோர்டன், பேபியன் ஆலன், இஷான் பொரேல் ஆகியோரும் வாய்ப்புக்காக காத்திருக்கின்றனர்.

 

கடந்த ஐபிஎல்லில் ஏமாற்றத்தை கண்ட தோனி இந்த முறையாவது சாதிப்போம் என்று களம் கண்ட  தோனி. அதே பழைய படையுடன் களம் கண்ட தோனிக்கு ‘ஸ்பார்க்’ தெரியவில்லை. எனினும்  இந்த ஆண்டு மீண்டும் களம் இறங்கிய  ‘சின்ன தல’ ரெய்னா பொறுப்புடன் விளையாடி நம்பிக்கை அளிக்கிறார்.அனுபவம்  அம்பாதி ராயுடு,  இளமை சாம் கரன்,  ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா ஆகியோரும் வழக்கம் போல் இன்றும் சாதிக்க காத்திருக்கிறார்கள்.

புதிதாக களம் இறங்கிய மொயீன் அலியும் அசத்துகிறார். ஆனால் பந்து வீச்சில்  சென்னையும்,  தோனி போலவே தடுமாறுகிறது. அதனால் 2வது போட்டிக்கான அணியில் கட்டாயம் மாற்றங்கள் இருக்கும். மொத்தத்தில் பஞ்சாப் பேட்டிங்கை சிஎஸ்கே பந்து வீச்சு எப்படி எதிர்கொள்ளும் என்பதை பொறுத்துதான் போட்டியில் வெற்றித் தோல்வி அமையும்.

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

tamilbusinessideas.com