தமிழகத்தில் அனைத்து போலீஸ் நிலையங்களில் சி.சி.டி.வி. கேமராக்களை இந்த ஆண்டுக்குள் பொருத்த சுப்ரீம் கோர்ட்டு காலக்கெடு விதித்துள்ளது. விசாரணைக்கு வருபவர்கள் மற்றும் கைதிகள் மீதான சித்திரவதைகள் தடுக்க, அனைத்து காவல் நிலையங்களில் சி.சி.டி.வி. கேமராக்களை பொருத்த சுப்ரீம் கோர்ட்டு கடந்த 2018-ம் ஆண்டு தீர்ப்பளித்தது.

சி.சி.டி.வி. பொருத்தும் விவகாரத்தில் உரிய நிதியை ஒதுக்க ஹரியானா உள்ளிட்ட தேர்தல் நடைபெறும் மாநிலங்கள் தவிர்த்து, ஏனைய மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை அமலாக்கும் காலவரிசை விவரங்களை 4 மாதங்களுக்குள் தெரிவிக்கவும், நிதி ஒதுக்கிய பிறகு சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுகளை 5 மாதங்களுக்குள் செயல்படுத்தவும் உத்தரவிட்டனர்.







