கள்ளக்காதலை கண்டித்த சகோதரி, தாய்யை கூலிப்படை வைத்து படுகொலை செய்த பெண்!

மதுரை மாவட்டம் மேலூர் அருகே பதினெட்டாங்குடியைச் சேர்ந்தவர், நீலாதேவி 47 வயதான இவருக்கு மகேஷ்வரி, அகிலாண்டேஷ்வரி என 2 மகள்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணமான நிலையில், இளைய மகள் அகிலாண்டேஷ்வரி கருத்து வேறுபாடு காரணமாக கணவனைப் பிரிந்து தாயுடன் வசித்து வருகிறார். மூத்த மகள் மகேஷ்வரி கணவருடன் இதே ஊரில் அருகில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் மகேஷ்வரிக்கு இதே ஊரைச் சேர்ந்த வேறு ஒரு நபருடன் கள்ளக்காதல் இருந்து வந்ததாகத் தெரிகிறது. இது குறித்து அறிந்த தாய் லீலாதேவியும், அகிலாண்டேஷ்வரியும், மகேஷ்வரியைக் கண்டித்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக பல முறை வற்புறுத்தி சண்டையிட்ட நிலையில், மகேஷ்வரி சில மாதங்களாக உறவைத் துண்டித்துள்ளார்.

இந்த நிலையில், திங்கட்கிழமை இரவு நீலாதேவியும், அகிலாண்டேஷ்வரியும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது, நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் இருவரையும் அரிவாளால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர். அவர்களது அலறல் சத்தம் கேட்டு அருகில் வசிப்பவர்கள் வருவதற்குள் மர்ம நபர்கள் தப்பியோடினர். தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த மேலூர் போலீசார், கொலையான நீலாதேவி, அகிலாண்டேஷ்வரி உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து மேலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் நீலாதேவியின் மூத்த மகள் மகேஷ்வரிக்கு கள்ள உறவு இருந்து வந்ததும். அதை கொலையான தாயும், மகளும் கண்டித்ததும் தெரிய வந்தது. இந்தக்கொலை தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் மகேஷ்வரி தனது கள்ளக் காதலன் சசிக்குமார் மூலம் இருவரையும் வெட்டி படுகொலை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த மேலூர் போலீசார் இது தொடர்பாக கொலைக்கு பயன்படுத்திய கத்தி போன்ற ஆயுதங்களை பறிமுதல் செய்துள்ளனர்.

 
Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Tamil Business Ideas