இன்றைய ராசிபலன் 31-05-2021

மேஷம்:

உறவினர்கள், நண்பர்கள் ஆதரவாகப் பேசத் தொடங்குவார்கள். தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள்.  பழைய கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் நம்பிக்கையை பெறுவீர்கள். முயற்சிகள் பலிதக்கும் நாள்.

ரிஷபம்:  

குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். அலுவலகத்தில் மரியாதை கூடும். புத்துணர்ச்சி பெருகும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்:மஞ்சள், பச்சை, வெள்ளை; அதிர்ஷ்ட எண்கள்: 5, 9.

மிதுனம்:

சந்திராஷ்டமம் இருப்பதால் சின்ன சின்ன அவமானங்கள், மனக் கலக்கங்கள் வந்து போகும். கொஞ்சம் பொறுமையை இழப்பீர்கள். அதிக உரிமை எடுத்துக் கொண்டு யாரிடமும் பேச வேண்டாம். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கடிந்து கொள்ளாதீர். உத்தியோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. எதிர்பார்ப்புகள் தாமதமாகி முடியும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, நீலம்; அதிர்ஷ்ட எண்கள்: 1, 2, 7.

கடகம்:

பிள்ளைகள் குடும்ப சூழ்நிலைக்கு தகுந்தார் போல் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். தாய்வழி உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் உண்டு. உத்தியோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள. திடீர் யோகம் கிட்டும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்:வெள்ளை, மஞ்சள், பச்சை; அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5.

சிம்மம்:

அடுத்தவர்களை நம்பி இருக்காமல் தன் முயற்சியால் முன்னேறுவோம் என்று முடிவுக்கு வருவீர்கள். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்தியோகத்தில் சில புதுமைகளைச் செய்து எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். தொட்டது துலங்கும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்:வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம்; அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9.

கன்னி:

குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் புது வேலையாட்கள் அமர்த்துவீர்கள். உத்தியோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். கனவு நனவாகும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்:ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்; அதிர்ஷ்ட எண்கள்:1, 3,5, 9.

துலாம்:

நீண்ட  நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படும். வேற்று மதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை கண்டறிவீர்கள். உத்தியோகத்தில் திருப்தி உண்டாகும்.  தேவைகள் பூர்த்தியாகும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்; அதிர்ஷ்ட எண்கள்:  2, 5, 7.

விருச்சிகம்:

குடும்பத்தில் உள்ளோர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். வெளிவட்டாரத்தில் உங்கள் அந்தஸ்து உயரும். சொத்துப் பிரச்னைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். தைரியம் கூடும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை; அதிர்ஷ்ட எண்கள்:1,3, 5.

தனுசு:

கணவன்-மனைவிக்குள் அன்னியோன்யம் அதிகரிக்கும். விலை உயர்ந்த ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள். உறவினர்கள் உங்களை புரிந்து கொள்வார்கள். வியாபாரத்தில் சூட்சுமங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்:நீலம், இளஞ்சிவப்பு; அதிர்ஷ்ட எண்:3, 6, 9.

மகரம்:

பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சில விஷயங்களில் திட்டமிட்டது ஒன்றாகவும் நடப்பது ஒன்றாகவும் இருக்கும். வியாபாரத்தில் ரகசியங்களை யாரிடமும் வெளியிட வேண்டாம். உத்தியோகத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்து போகும். விழிப்புடன் இருக்க வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட நிறம்:ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்; அதிர்ஷ்ட எண்கள்1, 3, 5, 9.

கும்பம்:

குடும்பத்தில் வாக்குவாதங்கள் வந்து நீங்கும். முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். உடன் பிறந்தவர்கள் வகையில் அலைச்சல் உண்டு. சாலைகளை கவனமாக கடந்து செல்லுங்கள். வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளால் பிரச்சினைகள் வரக்கூடும். போராடி வெல்லும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்; அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9.

மீனம்:

குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். மனைவி வழியில் ஆதாயம் உண்டு. வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும். பெருந்தன்மையுடன் நடந்துக் கொள்ளும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்:மஞ்சள், வெள்ளை; அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9.

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Tamil Business Ideas