சென்னை உயர்நீதிமன்றத்தில் 367 காலியிடங்கள்-விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

சென்னை உயர்நீதிமன்றத்தில் ‘அலுவலக உதவியாளர்’ உட்பட பல பிரிவுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடம்: சோப்தார் 40, அலுவலக உதவியாளர் 310, சமையலர் 1, வாட்டர்மேன் 1, ரூம் பாய் 4, வாட்ச்மேன் 3, புக் ரெஸ்டோரர் 2, நுாலக உதவியாளர் 6 என மொத்தம் 367 இடங்கள் உள்ளன.

வயது: 1.7.2021 அடிப்படையில் பொது பிரிவினர் 18 – 30 வயதுக்குள், இடஒதுக்கீடு பிரிவினர் 18 – 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: அலுவலக உதவியாளர் பிரிவுக்கு ‘இலகு ரக ஓட்டுநர் உரிமம்’ வைத்திருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

தேர்ச்சி முறை : எழுத்துத்தேர்வு, செய்முறைத்தேர்வு, வாய்மொழி தேர்வு அடிப்படையில் தேர்ச்சி
நடைபெறும்.

தேர்வு மையம்: சென்னை, மாநிலத்தின் முக்கிய நகரங்களில் நடைபெறும்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500. எஸ்.சி.,/ எஸ்.டி.,/மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள் : 21.4.2021

விபரங்களுக்கு: www.mhc.tn.gov.in/recruitment/docs/not_36_2021_eng.pdf

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Home Business Ideas for Women