செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளியில் மாணவியர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவது தொடர்பாக, முன்னாள் மாணவ, மாணவியர்கள் 900 பேர் கையெழுத்திட்டு புகார் மனு அளித்துள்ளனர்.
இதுகுறித்து புகாரில் அவர்கள் கூறியிருப்பதாவது: பல ஆண்டுகளாக புகார் அளித்தும், பள்ளி நிர்வாகம் தரப்பில் உரிய விசாரணை நடத்தப்படவில்லை. பள்ளியில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாதோர் என, பலர் மீது கொடுக்கப்பட்ட புகார்களில் ஒன்றின் மீது கூட, இதுவரை விசாரணை நடத்தப்படவில்லை. புகாருக்கு உள்ளாகக் கூடிய ஆசிரியர்கள் மீது, தாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்படும் மாணவிகளை அழைத்து, அவர்களுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்க வேண்டும்.
புகாருக்கு பதில் அளிக்க, ஜூன் 8ம் தேதி ஆஜராகுமாறு பள்ளி நிர்வாகத்திற்கு தமிழ்நாடு குழந்தைகள் உரிமை பாதுகாப்பு கமிஷன் சம்மன் அனுப்பி உள்ளது. அதேபோல, சேத்துப்பட்டு மகரிஷி வித்யா மந்திர் பள்ளி, அமைந்தகரை செயின்ட் ஜார்ஜ் பள்ளிகளின் ஆசிரியர்கள் மீதும், பாலியல் புகார்கள் எழுந்துள்ளன. இந்நிலையில், விசாரணைக்கு ஆஜராகுமாறு தமிழ்நாடு குழந்தைகள் உரிமை பாதுகாப்பு கமிஷன், பள்ளிகளின் நிர்வாகிகளுக்கு சம்மன் அனுப்பியுள்ளது.
இந்த புகார் தொடர்பாக, செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளிக்கு தமிழ்நாடு குழந்தைகள் உரிமை பாதுகாப்பு கமிஷனின் தலைவர் சரஸ்வதி ரங்கசாமி குழு நேராக சென்று விசாரித்துள்ளது. இது தொடர்பாக மேல் விசாரணைக்கு பள்ளி முதல்வர், ஆசிரியர்கள், அலுவலர்கள் என புகார் கூறப்பட்டுள்ள அனைவரையும்,ஜூன் 8ம் தேதி ஆஜராக பாதுகாப்பு கமிஷன் சம்மன் அனுப்பி உள்ளது.
Puthiyathalaimurai TV Thanthi TV News18 Tamil Nadu News7 Tamil Sathiyam TV Sun News Kalaignar News News J TV Jaya Plus News Captain TV News Polimer News